தமிழகம் மிதக்கிறது !

தமிழகம் மிதக்கிறது !

அரசியல்வாதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்களின் பேராசைக்கு நீர் நிலைகளும் வடிகால்களும் இரையாகி, வெள்ள நீர் போக்கு தெரியாமல் நம் வீட்டுக்குள் வந்து நிற்கிறது.

நவம்பர் மாதம் தமிழ்நாடு வெள்ளக்காடு ஆனால் மார்ச்சில் குடிக்க தண்ணீர் இல்லை என குடங்களுடன் வீதியில் இறங்கவேண்டியுள்ளது.

நமது ஆட்சியாளர்களும் திறமையற்றவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம்

டாஸ்மாக் போராட்டம் தீவிரமாக நடத்து வந்தபொழுது மூன்று நாள் பழைய செய்தியான இளங்கோவன் ஜெயலலிதா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு போராட்டம் அறிவித்து டாஸ்மாக் போராட்டத்தையே திசை திருப்பிய திறமையான ஆட்சியாளர்கள் கொண்ட மாநிலம் நமது.

எதிர்கட்சிகளும் ஒன்றும் ஒழுக்க சீலர்கள் அல்ல அவர்கள் தலையில் 2G கத்தி இன்னும் தொங்கிக்கொண்டு தான் இருக்கிறது அவர்கள் மாவட்ட செயலாளர்களும் ஆட்டம் போட வாய்ப்பை எதிர்பார்த்து தயாராகத்தான் உள்ளார்கள்.

மழைவந்தால் ஒரு சாப்பாடு பொட்டலத்தோடு கேமராமேனையும் கூட்டி வந்து நம்மை சந்திப்பார்கள். ஆனால் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு எல்லாம் நமது கட்சிகளிடம் கிடையாது. கடந்த 45 ஆண்டு திராவிட கட்சி ஆட்சியில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை என்பதே அதற்கு சாட்சி.

chennai rain

தேர்தல் தான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம். உருப்படியாக நீர் நிலைகளை பராமரிக்க திட்டம் உள்ளவனுக்கே ஓட்டு என தீவிரமாக இருங்கள்

கண்டிப்பாக கட்சிகளுக்கு வேறு வழி இருக்காது.எதை தின்றால் பித்தம் தெளியும் என்பதே கட்சிகளின் நிலை.

அவர்கள் ஜெயிக்க நீர் நிலைகள் கட்டவேண்டும் என்றால் தாராளமாக கட்டுவார்கள். அவர்கள் ஜெயிக்க இலவசம் தந்தால் போதும் என்றால் அதையும் தாராளமாக தருவார்கள்.

மீண்டும் சொல்கிறேன் நாம் எதை முன்நிறுத்துகிறோமோ அதுவே நமக்கு தரப்படுகிறது ! இன்னும் 6 மாதம்தான் உள்ளது சட்டமன்ற தேர்தலுக்கு அதற்குள் இந்த பிரச்சனைகளை மறந்துவிடாதே ! 

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)