வரலாற்றின் பக்கங்கள் - பழைய புத்தக கடை

பழைய புத்தக கடை , சென்னை மூர் மார்க்கெட்

கல்லூரி முடிந்ததும் சுற்றுலா செல்வது போல அனைவரும் செல்லும் ஒரு இடம் பழைய புத்தக கடை. அப்பொழுது கல்லூரி தேர்வுகள் முடியவில்லை. எனவே அவ்வளவாக அந்த கடையில் கூட்டமில்லை. 

digitalnativeworld

கூட்டம் இல்லாததால் பொழுது போக்கிற்கு வானொலி கேட்டுகொண்டிருந்த கடைக்காரர் யாரோ தன் கடைக்கு வந்திருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தார்.

இளம் வயதுடைய இளைஞன், கண்ணில் சோகம், பை நிறைய புத்தகம் என நின்றான்.எப்பொழுதுமே பொறியியல் புத்தங்களுக்கு அங்கே கடும் கிராக்கி. வந்திருப்பவன் பொறியியல் மாணவன் என்று தெரிந்ததும் கடைகாரனுக்கு ஏக குஷி.

பையையில் உள்ள புத்தகங்களை பார்த்தார். புத்தகத்தின் முனைகள் கூட மடங்காமல் பத்திரமாக படித்திருந்தான் அந்த இளைஞன்.

வந்தவன் முகத்தில் இருக்கும் சோகத்தை கடைக்காரர் கவனித்தார். ஆனால் அவனிடம் பேச்சு கொடுக்கவில்லை.

ஒருபுத்தகத்தை பிரித்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தார் .அந்த புத்தகத்தில் எழுதி இருந்த வரிகள்

" Awarded for excellence in academics in the first year of engineering at the Madras Institute of Technology by the Vice- Chancellor"

தம்பி இந்த புத்தகம் பரிசாக வாங்கியதா ?

ஆமாம் அந்த பையில் இருக்கும் எல்லாம் நான் பரிசாக வாங்கியவை தான் என்றான்  விரக்தியுடன்.

கடைக்காரர் மெதுவாக பேச்சு கொடுத்தார்.

என்ன ஆச்சு தம்பி என் பரிசு வாங்குன புக் எல்லாத்தையும் கடைல போடற

எவரேனும் ஒருவரிடம் இந்த உலகத்தில் தன் கஷ்டத்தை  எல்லாவற்றையும் கொட்டவேண்டும் என்று இருந்த அந்த இளைஞன் கடைக்காரர் இப்படி கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் கொட்டி தீர்த்தான் தனது நிலையை.

"அண்ணா எனக்கு ஊரு இராமேஸ்வரம் பக்கம். போனவாரம்  வந்த புயல்ல எங்க அப்பாவோட கப்பல் அடிச்சுட்டு போய்ட்டு. வீட்ல சாப்பாடுக்கு கஷ்டம் அதன் படிப்ப நிப்பாட்டிட்டு வரசொல்லிடாங்க. ஊருக்கு போறதுக்கு கூட கைல பணம் இல்ல. அதன் என்கிட்ட இருக்க புக் எல்லாத்தையும் கடைல போட்றேன். கொஞ்சம் பார்த்து நல்ல விலை கொடுங்க அண்ணா "

தலை சிறந்த மாணவன் என்று கல்லூரி கொடுத்த நினைவு புத்தகத்தை கூட விற்க வைத்த அவனது வறுமை கடைக்காரரை பாதித்தது.

தம்பி உனக்கு நான் பணம் தர்றேன் ஊருக்கு போய்ட்டு வா, படிப்ப விட்டுடாத என்று கூறி பணத்தை நீட்டினார் அவர். முதலில் பணத்தை வாங்க மறுத்த இளைஞன் கடைகாரரின் பிடிவாதத்தால் வாங்கிகொண்டான்.

கடைக்காரருக்கு கண்ணீருடன் நன்றி கூறி  தனது புத்தகங்களை மீண்டும் எடுத்து பையில் வைத்து  கொண்டு ஊருக்கு புறப்பட்டான்.

ஆம் சாப்பாட்டுக்கு தனது புத்தகத்தை விற்க வேண்டிய நிலையில் இருந்து இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக மாறிய Dr . A.P.J Abdul Kalam ன் கதை இது.

வாழ்கையின் உச்சம் உழைப்பில் அல்லவா வரும் !

Comments

  1. Superb brothr...Fav kalam's story..really njoyd..

    ReplyDelete
  2. 832nothing to say speechless ...great man ..

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)