நோட்டா ஓட்டு

செப்டம்பர் 27, 2013 இந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் இனி ஓட்டு போடும் எந்திரத்தில் நோட்டா ( NATO - None Of The Above) என்று அழைக்கப்படும் யாருக்கும் ஓட்டு போடா விருப்பம் இல்லை என்று குறிக்கும் பட்டனை கட்டாயம் இடம் பெற செய்யவேண்டும் என்று தீர்பளித்தது.

vote for change


இது அரசியல் கட்சிகளுக்கு பெருத்த அடி என்றும் , வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்றும் பலர் கொண்டாடுகின்றனர்.

இதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது. ஆனால் இந்த முடிவு இந்திய அரசியலை தலைகீழாக புரட்டிவிடும் என்று நான் நினைக்கவில்லை.

தேர்தல் என்றால் காந்தி ஜெயந்தி போல ஒரு அரசாங்க பொது விடுமுறை தினம் என எண்ணி வீட்டிலே படம் பார்க்கும் தோழர்களும், சமுதாயத்தில் உயர் இடத்தில் இருப்பவரும்,  யாருக்கு ஒட்டு போட்டால் என்ன நடக்க போகிறது என்று  ஓட்டே போடாதவருக்கும் பஞ்சமில்லை இந்த நாட்டில்.

அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த பலர் ஒட்டு போடுவதில்லை என்பதும் ஒரு கருத்து. இத்தகைய மக்களை ஒட்டு சாவடிக்கு இழுத்து வரும் ஒரே வழி நோட்டா தான் என்கிறது ஒரு தரப்பு.

இந்திய வாக்களர்களுக்கு நோட்ட பற்றிய விழிப்புணர்வு குறைவு. எனவே அது இந்த தேர்தலில் டெபாசிட் வாங்குவது கடினம் தான்.

ஒருவேளை வாக்காளர்கள்  தூக்க கலக்கத்திலோ அல்லது மேலே இருக்கும் 30 வாக்காளர்களில் பெயர்களை படிக்க அலுப்புபட்டு கடைசி பட்டனான நோட்டவை அழுத்தி திராவிட கட்சிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி நோட்டா வை முதலிடம் பெற செய்தால் ?

செய்தால் ? ஒன்னும் நடக்காது 6 மாசம் கழிச்சு திரும்ப தேர்தல் நடக்கும் .ஆறு மாசாத்துக்கு அப்பறம் திரும்ப வாழ்க ! ஒழிக ! அம்மாவே ! தமிழர்களே தமிழர்களே அதே தான்.

ஆனால் கட்சிகளுக்கு  நாம் சரியான வேட்பாளரை நிறுத்தாவிடில் மக்கள் நிராகரிபார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு வேட்பாளர் தேர்வில் சில மாற்றங்கள் வர ஒரு வாய்ப்பாக இருக்கும்.

சரி 2014 பொது தேர்தலில் நோடாவுக்கு ஓட்டு போடலாமா என்றால் என் கருத்து வேண்டாம் என்பதே .

இந்திய பொருளாதாரம் இருக்கும் நிலையில் அதை சீர் செய்ய வரப்போகும் புதிய அரசாங்கம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும். கடினமான முடிவுகளை எடுக்க கண்டிப்பாக நிலையான அரசாங்கம் தேவை.

(தனி மெஜாரிட்டி இல்லாமல் அமையும் அரசாங்கம் கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய அவர்களின் மீது உள்ள வழக்குகளை தளர்த்துவது, மிரட்டுவது என பல தாஜா வேலைகளை செய்யவே நேரம் சரியாக இருக்கும் ).

இன்று காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் ஒரு நல்ல தலைமையை நாட்டுக்கு தரவேண்டுமே தவிர மீண்டும் ஒரு தொங்கு பாராளமன்றத்தையோ அல்லது குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தவோ வழிவகுத்து விடக்கூடாது.

இந்த பொது தேர்தலில்  நாடு இருக்கும் பொருளாதார சூழ்நிலையை கருதி உங்கள் ஓட்டு ஒரு நல்ல தலைமையை உருவாக்க பயன்படவேண்டும்.

யாரும் வேண்டாம் என்று நீங்கள் போடும் ஓட்டு தவறான வேட்பாளர் தேர்வாக காரணமாகிவிடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

உதாரணமாக இப்படி வைத்து கொள்ளுங்கள்

A,B,C என்று மூன்று கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன என வைத்துகொள்வோம். A விற்கும் ,B விற்கும் 20 % ஓட்டு வங்கி உள்ளது எனில் நடுநிலையாளர்களின் ஓட்டு சதவிதம் 60 அதில் ஓட்டு போடா வருவோர் 30 சதவிதம் எனில் அந்த 30 சதவிதமே வெற்றியை தீர்மானிக்கும் ஒட்டுகளாகும்.

ஆளும் கட்சிக்கு (A ) எதிரான அந்த 30 சதவிதம் மக்களின் கோபம் நோட்டவிற்க்கு செல்லும் பட்சத்தில் மக்கள் எந்த ஆளும் கட்சி வரவேண்டாம் என்று நினைத்து நோட்டவை பயன்படுத்தினார்களோ அது அவர்களுக்கே எதிராக போய்விடும்.

A கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க கூட வாய்ப்பு உண்டு.

எனவே இந்த 2014 பொது தேர்தலில் ஒரு நல்ல தலைமையை தேர்ந்தெடுப்போம்.

இந்தியாவை மீட்போம்...!

Comments

  1. even strong dose is expected... but good one in right time....
    social responsibility....
    by Lakshmanan R

    ReplyDelete
  2. People are easily deceived by the rapt speech of politicians...tey dont know hw to select the rit peopl and hw to handle the elections...i tink tis NATO ll play a pivitol role in the upcoming election..right post at right time..superb

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)