வரலாற்றின் பக்கங்கள் - ஆபரேஷன் பூமாலை
இடம்: க்வாலியர் (Gwalior)
காலை சூரியனின் ஒளி இன்னும் முற்றாக பரவவில்லை.
அரை தூக்கத்தில் இருந்த அஜித் பவ்னானியின் காதுக்கு தன் அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சத்தம் கேட்டது .
அஜித் பவ்னானி இந்திய விமான படையின் மூத்த அதிகாரி. இத்தனை காலையில் அவரது அறை கதவு தட்டப்பட்ட பொழுதே ஏதோ முக்கிய செய்தி வந்திருக்கிறது என்று அவருக்கு தெரிந்து விட்டது . கதவை திறந்த பொழுது மூச்சு வாங்கிபோய் நின்ற அவரது படை வீரன் தன்னை ஆசுவாச படுத்த கூட நேரம் தராமல் ஒரு காகிதத்தை நீட்டினான்
அந்த காகிதம் இந்தியாவின் தலைநகரில் இருந்து வந்திருந்தது .
" உடனே 5 விமானிகளுடன் மிராஜ் 2000 ரக விமானத்தில் பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு வரவும் "
மிராஜ் 2000 |
நேரம் மத்தியத்தை நெருங்கிவிட்டது. அஜித் பவ்னானிக்கு குழப்பமாக இருந்தார் காரணம் தன்னை பெங்களூருக்கு அழைக்கபட்ட காரணம் இன்னும் சொல்லப்படவில்லை.
An 32 ரக விமானம் |
அதேநேரம் இந்தியாவின் தாஜ்மஹால் நகரான ஆக்ராவில் இருந்து ஐந்து An 32 ரக விமானங்கள் [இந்திய ராணுவத்திற்கு பாரசூட் பயிற்சி அளிக்க பயன்டுத்தபட்டவை ] மருந்து மற்றும் உதவி பொருட்கள் நிரப்பப்பட்டு பெங்களூருவில் தரை இறங்கியது.
மதியம் 3 மணிக்கு டெல்லியில் இலங்கையின் தூதர் அழைக்கப்பட்டார். அவரிடம் சொல்லப்பட்ட செய்தி அவர் சற்றும் எதிர்பாராதது .
ஆம் செய்தி இதுவே
" இந்தியாவின் An 32 ரக விமானங்கள் ஐந்து இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு மேலே பறந்தபடி உதவி பொருட்களை வழங்கும். இதற்கு ஆபரேஷன் பூமாலை என்று பெயர் சூட்டியுள்ளோம். இந்த நடவடிக்கையை இலங்கை இராணுவம் தடுக்கும் பச்சத்தில் பாதுகாப்பிற்கு வரும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் தக்க பதிலடி தரும் "
1971 போருக்கு பின் இந்திய இராணுவம் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழையபோவது அதுவே முதல் முறை.
அதை செயல்படுத்தவே அஜித் பவ்னானி மற்றும் அவரது தலை சிறந்த விமானிகளும் பெங்களுருக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பத்திரிக்கையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதில் இருந்து 35 பேர் தேர்தெடுக்கப்பட்டு விமானத்துக்கு 7 பேராக ஐந்து An 32 விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.
An 32 விமானங்களின் பாதுகாப்பிற்கு அஜித் பவ்னானியின் தலைமையிலான மிராஜ் 2000 ரக விமானமும் பின் செல்ல மாலை 4 மணிக்கு இந்திய இராணுவ விமானங்கள் 1500 அடி உயரத்தில் இலங்கையின் யாழ்நகரை வட்டமடித்தன.
பின் மருந்து மற்றும் உதவிப் பொருட்கள் விமானத்தில் இருந்து கீழே போடப்பட்டன. வெள்ளை நிற பரசூட்கள் உடனுக்குடன் விரிந்து தீர்மானிக்கப்பட்ட பகுதிகளில் சென்று பொருட்கள் இறங்கின.
சில சமயம் இந்திய விமானங்கள் இலங்கையின் விமானப் படைத் தளமான பலாலிக்குச் சமீபமாக பறந்த போதும் எதிர்ப்பு ஏதும் அவர்கள் வெளிபடுத்தவில்லை. அவர்களிடம் இருந்த சியாமசெட்டி ரக போர் விமானங்களை வைத்து கொண்டு இந்தியாவின் மிராஜ் 2000 விமானங்களை எதிர்ப்பது கனவிலும் நடக்காது என்பது இலங்கைக்கு தெரியும்.
25 டன் உதவி பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக இந்தியா பின்னர் அறிவித்தது. மாலை 6 மணிக்கு பெங்களுருக்கு திரும்பிய இந்திய விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது .
இலங்கையில் நடக்கும் சிவில் யுத்தத்தை இந்தியா வேடிக்கை பார்க்காது என்று புரிய வைக்க இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை முழு வெற்றி பெற்றது.
நிகழ்வின் பின்னணி :
இலங்கை தீவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறிய பின் இலங்கை இராணுவதால் நேரடியாக மேற்கொள்ள பட்ட இராணுவ நடவடிக்கை ஆபரேஷன் லிபரேசன் என்பதாகும் . இது 1987 ஆம் ஆண்டு விடுதலை புலிகளிடமிருந்து யாழ்ப்பாண நகரான வடமராட்சியை மீட்க மேற்கொள்ள பட்ட இராணுவ நடவடிக்கையாகும். இதில் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய கப்பல் படை 10 டன் உதவி பொருட்களுடன் அனுப்பிய கப்பலை இலங்கை திருப்பி அனுப்பியது, இதனால் கடும் கோபம் கொண்ட இந்தியாவின் இளம் பிரதமர் ராஜீவ் உத்தரவில் நடத்தபட்டதே ஆபரேஷன் பூமாலையாகும் .
The history is rebuilded thru ur posts...nyc...
ReplyDelete