வரலாற்றின் பக்கங்கள் - ஒரு கடிதம்

அது ஒரு குளிர் காலம்

இங்கிலாந்தின் அரசர் முதலாம் ஜேம்ஸ் தன் அரசவை கவிஞரின் வரவை எதிர்பார்த்து கோட்டையில் அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தார்.

அரசவை கவிஞருக்கு ஆங்கிலத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் அத்துப்படி. அத்தனை காலையில் அரசர் அழைப்பு என்றதும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் கிளம்பினார் கவிஞர்.

ஏதோ முக்கிய வேலை உனக்கு காத்திருக்கிறது என்றது அவரது மனம். அவசர அவசரமாக தனது குதிரை பொருத்திய வண்டியை கிளப்பினார்.

குதிரைக்கு அரசரையும் தெரியாமல் அவரசமும் புரியாமல் மெல்ல நகரவே சுளீர் ! என்று ஒரு அடிவைத்தார் அந்த நீல கோட் போட்ட ஆங்கில கவிஞர்.

அரசர் குறுக்கும் நெடுக்கும் நடத்து கொண்டிருந்தார்.

உலகின் பாதியை ஆளும் இங்கிலாந்தின் மாண்புமிகு அரசருக்கு எனது வணக்கங்கள் என்ற குரல் கேட்ட திசையை நோக்கினர் அரசர் .

கண்டிப்பாக இவரால் இந்த பணியை சிறப்பாக செய்யமுடியும் என்றது அரசர் மனம். குரலை சரி செய்து கொண்டு அரசர் தொடர்ந்தார்.

வாருங்கள் கவிஞரே !
உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன். அதிமுக்கியமான வேலை. உங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த வேலையே உங்களிடம் ஒப்படைக்கிறேன் .எனக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதி தரவேண்டும். நன்றி கூறும் கடிதம்.

என்ன கடிதமா ? கடிதம் எழுதவா என்னை அழைத்தீர்கள் ??

ஆமாம் கடிதத்தின் சாராம்சம் இதுதான் " கிழக்கு இந்திய கம்பெனி தடையில்லா வர்த்தகம் செய்ய அனுமதி அளித்ததற்கு நன்றி ". 

கவனம் கவிஞரே !
தேர்ந்த வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கடிதம் இந்தியா என்னும் செல்வந்த நாட்டை ஆளும் அரசரை புகழும் வண்ணம் இருக்கவேண்டும். இங்கிலாந்தின் இந்திய வர்த்தக உறவின் ஆரம்பமே உங்கள் கடிதம் தான்.

கவிஞர் கடிதத்தை எழுதி முடித்தார்.

" முகலாய அரசர்களில் சிறந்த வலிமையுடையவரே, இந்தியாவின் அரசே, கந்தஹாரின், காஷ்மீரின், கௌரஷானின் மன்னரே, தடையில்லாமலும் தொந்தரவு இல்லாமலும் ஆங்கிலேயர்கள் வணிகமும் வர்த்தகமும் செய்ய அனுமதித்தான் மூலம் எங்களுக்கும் எங்கள் குடிமக்களுக்கும் பேருதவி புரிந்ததற்கு நன்றி. தோட்டத்தில் உள்ள மலர்கள் மணம் அதிகரித்து கொண்டே போவதை போல நமது நட்பும் அதிகரித்து கொண்டே போகட்டும் "
இப்படியாக நீண்டது கடிதம்.

உடனே அதை வாங்கி பார்த்த அரசர்  இரண்டொரு முறை அதை சரி பார்த்தார். தனது திறமை மீது அரசருக்கு நம்பிக்கை இல்லையோ என்று அந்த நீல கோட் கவிஞருக்கு மனுதுக்குள் கோபம்.

கடைசியாக அரசர் முகத்தில் ஒரு புன் முறுவல். கவிஞரே அற்புதம், கடிதம் மிக அற்புதம்.
digitalnative world digital native
King James

இது என்னடா அரசர் ஒரு கடிதத்துக்கு இத்தனை ஆர்பாட்டம்
செய்கிறாரே என்று குழப்பம் கவிஞருக்கு.  பாவம் அந்த கடிதம் மாபெரும் பொருளாதார வல்லரசானா இந்தியாவின்  வீழ்ச்சியின் முதல் படி என்று அவருக்கு தெரிந்திருக்க நியாமில்லை தான்.

கடிதம் மிக உயர்த்த தரத்திலான துணி ஓலையில் மறு பதிப்பு செய்யப்பட்டது. அதை இந்தியாவின் மகாஅரசரிடம் ஒப்படைக்கும் பணி செல்வாக்கு மிகுந்த தூதரான சர் தாமஸ் ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது .

( இந்தியா, 19 ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே பொருளாதார வலிமை உள்ள நாடு . அதை ஆள முடியாவிட்டாலும் அங்கே கடை வைக்க அனுமதி கொடுத்ததே பெரும் பாக்கியம் என்று நினைத்த இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் அனுமதி அளித்ததற்கு இந்தியாவின் மாமன்னர் ஜஹாங்கிர் அவர்களுக்கு நன்றியாக ஒரு கடிதம் எழுதி தனது தூதுவர் சர் தாமஸ் ரோவிடம் கொடுத்து அனுப்பினார். )

இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்  வரலாற்றின் பக்கங்கள் - யூஸ் & த்ரொ  ( Use & Throw )

Comments

  1. Really feeling hurt when I thought about India's economic resource now...your post makes me thought to do something for our mother land..inspired lot...

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)