விவசாயத்தை காக்க விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுங்கள்

இந்தியாவின் விவசாய பிரச்னையை புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல..

சிறிய உதாரணம் சொல்கிறேன் :

2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நாட்டிலேயே அதிகபட்சமாக  விவசாயத்தில் 14% வளர்ச்சி  கண்ட மாநிலம் மத்திய பிரதேசம். இதற்கு காரணம் அரசாங்கம் நீர் சார்ந்த திட்டங்களிலும், பயிர் உற்பத்தியிலும் அதீத கவனம் செலுத்தியது தான். ஆனால் அதன் விளைவு இன்று வேறுமாதிரி வெளிப்பட்டிருக்கிறது.

அதீத உற்பத்தி காரணமாக கருப்பு உளுத்தம் பருப்பு குவிண்டாலுக்கு வெறும் ₹ 4000 க்கு விற்பனை ஆகிறது. இது அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலையான (MSP) ₹ 5600 க்கு 29% குறைவான விலையாகும்.

பூண்டு அதீத உற்பத்தி காரணமாக கிலோ ₹ 7 க்கு வாங்கப்படுவதாக குமுறுகின்றனர் விவசாயிகள். விலை இன்னும் வீழும் என்ற அச்சம் வேறு உள்ளது.

உற்பத்தியில் மட்டும் அரசு பெரிய அளவில் கவனம் செலுத்த சந்தை படுத்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இன்று விவசாயிகளின் போராட்ட களமாக மாறியுள்ளது மத்திய பிரதேசம்.

சந்தை இருந்தால் தான் வியாபாரம் நடக்கும் , லாபம் வந்தால் தான் ஒரு தொழிலை செய்பவர் அதை தொடர்வார். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவேண்டும். அதற்கு உற்பத்தி செய்த பொருட்களை பதப்படுத்தி தேவை இருக்கும் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்யவேண்டும்.

எங்களுக்கு எதுக்கு பெரிய சாலைகள், துறைமுகங்கள், ஒரே நாடு ஒரே சந்தை ஒரே வரி (GST) எல்லாம் என்று கேட்ட அறிவு ஜீவிகளுக்கு மத்திய பிரதேச விவசாயிகளின் கலநிலவரமே தெளிவை தரட்டும்...

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)