இன்கமிங் கால் பெறக்கூட இனி ரீச்சார்ஜ் கட்டாயம்

மாதாமாதம் ரீச்சார்ஜ் செய்யாத பலருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை அளித்துதான் வருகின்றன.

அதற்கு காரணம் நீங்கள் ரீச்சார்ஜ் செய்யாவிட்டாலும் உங்களால் நிறுவனத்துக்கு வருமானம் வேறு வகையில் வந்துகொண்டு இருந்ததே.

உதாரணமாக நீங்கள் ஒரு ஏர்டெல் எண்ணை ரீச்சார்ஜ் செய்யாமலே வைத்திருந்தாலும் அந்த ஏர்டெல் எண்ணுக்கு பிற நெட்ஒர்க்கிடம் இருந்து வரும் கால்களுக்கு அந்த நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு பணம் தரவேண்டும். இதைத்தான் IUC (interconnection usage charges) என்று சொல்வார்கள்.

கடந்த அக்டோபரில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) IUC கட்டணத்தை 57% குறைந்தது அதேபோல் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் IUC கட்டணத்தை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தது. 

இதன்படி ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவது வீண் என்று ஆகிறது. எனவே இனி மாதாமாதம் குறைந்த பட்ச ரீச்சார்ஜ் செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.

அது மாதம் 35 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்