திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு

வாராக்கடனை வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC எனப்படும் திவால் சட்ட உதவியுடன் Bhushan Steel நிறுவன கடன் வழக்கு வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது

பூஷான் ஸ்டீல் டாடா ஸ்டீல்
Source : கூகுள் தேடுபொறி 

சுமார் 44,000 கோடி ரூபாய் அளவு கடனில் உள்ள Bhushan Steel நிறுவனத்தை IBC சட்ட உதவியுடன் வங்கிகள் ஏலம்விட்டன. இந்த ஏலத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் அதிகபட்சமாக 34000 கோடி ரூபாய் குறிப்பிட்டு Bhushan Steel நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது

இந்த வழக்கு மூலம் வங்கிகளுக்கு எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதையும், வங்கிகள் Bhushan Steel நிறுவனத்துக்கு கொடுத்த கடன் தொகையை அடைப்புகுறியிலும் () கீழே குறிப்பிட்டுள்ளேன்

* ஸ்டேட் வங்கி - 8083 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 12,000 கோடி ரூபாய்)
* PNB வங்கி - 3081 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 4904 கோடி ரூபாய்)
* கனரா வங்கி - 1794 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2856 கோடி ரூபாய்)
* ICICI வங்கி - 1583 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 2448 கோடி ரூபாய்)
* AXIS வங்கி - 1218 கோடி ரூபாய் (கொடுத்த தொகை 1939 கோடி ரூபாய்)

Bhushan steel நிறுவனத்துக்கு தனியார், பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு வங்கிகளும், L & T Finance போன்ற நிதி நிறுவனங்களும் சேர்த்து மொத்தமாக 53 நிறுவனங்கள் கடன்கொடுத்துள்ளன. Bhushan steel நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த தொகையில் 27% தொகை திரும்ப கிடைக்கப்பெறவில்லை (Haircut on lending)...

(எளிதாக சொன்னால் ஒரு வங்கி Bhushan ஸ்டீல் நிறுவனத்துக்கு 100 ரூபாய் கடனாக கொடுத்திருந்தால் சராசரியாக 73 ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்துள்ளது)

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)