மேதைகள் கொண்டாடப்படும் அளவுக்குசெயல்வீரர்கள் கொண்டாடப்படுவதில்லை
எல்லா மேதைகளும் செயல்வீரர்களா, காரியத்தை முடிப்பவர்களாக இருந்துவிடுவதில்லை..
காரியம் சாதிக்க தெரியாத மேதைகளால் எந்த பயனுமில்லை..
சில காரியக்கார்கள் மேதைகளாக அறியப்படுவதில்லை. ஏனெனில் யார் மேதை என்பதை மீடியா தான் தீர்மானிக்கிறது..
இதற்கு நான்கு உதாரணங்கள் சொல்கிறேன்....
திரு மன்மோகன் சிங் என்கிற பொருளாதார மேதை 1991ல் காரியம் சாதிப்பவராக இருந்தார். கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தாராளமயமாக்கல் சிந்தனையை வெற்றிகரமாக கொண்டு வந்தார். நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டர். ஆனால் அதே மன்மோகன் சிங் 2009 to 14 லில் வெறும் மேதை என்கிற பட்டதோடு அமைதியாக நேரு குடும்பத்தின் சேவகராக மட்டும் இருந்துவிட்டார். விளைவு கடுமையான பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அவரது அரசை தூக்கியேறிந்தது...
திரு ரகுராம் ராஜன் என்கிற பொருளாதார மேதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பொழுது வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தவறினார். இப்பொழுது எதிர்கட்சிகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து அறிக்கை விட உதவும் வகையில் பேட்டி அளித்துக்கொண்டு சுற்றுகிறார்..
அதேசமயம் வாரக்கடன் பிரச்னையை தீர்க்க உறுதியான நடவடிக்கை எடுத்த திரு உர்ஜித் பட்டேல் ரகுராம் ராஜன் அளவுக்கு கொண்டாடப்படுவதில்லை. அவரை யாரும் மேதை என்று அழைத்து பேட்டி காண்பதில்லை..
நிதியமைச்சராக இருந்த மறைந்த திரு அருண் ஜெட்லீ ஒரு வழக்கறிஞர். அவருக்கு என்ன பொருளாதாரம் தெரியும் என்று கிண்டலடித்தார்கள். ஆனால் 4 வருடம் நிதி பற்றாக்குறையை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் கொண்டுவந்த திவால் சட்டம் (IBC) இன்றும் வாரக்கடன் வசூலில் முக்கிய திருப்புமுனையாகும்...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve