வங்கிகள் இணைப்பும், வங்கி போட்டி தேர்வுகளின் எதிர்காலமும்
வங்கிகள் இணைப்பு இதோ அதோ என்று கடந்த வருடம் முழுவதும் இழுத்தடிக்கப்பட்டு நேற்று இறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது
இங்கே கலை, அறிவியல் பட்டம்பெற்றவர் துவங்கி பொறியியல் பட்டம் பெற்றவர் வரை பல லட்சம் பேர் வங்கியில் தனக்கு ஒரு வேலை கிடைக்கும் என நம்பி லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து படித்து வருகிறார்கள்
சென்னை தி.நகருக்கு பாண்டி பசார் போல வங்கி தேர்வு பயிற்சி மையங்களும் ஒரு அடையாளமாக மாறிவருக்கின்றன என்றால் மிகையல்ல
ஆனால் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் இனி எத்தனை பேரை வங்கிகள் புதிதாக பணியில் அமர்ந்தும் என்பதில் எனக்கு எதிர்மறையான நம்பிக்கையே உள்ளது
பொதுவாக வங்கி இணைப்புகள் போன்ற செயல்பாடுகள் நடைமுறைக்கு வர ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் முழுதாக ஆகலாம். அவை நிறைவு பெறும் வரை பெரிதாக ஆட்கள் நியமனம் இருக்காது. அதே போல் வங்கிகளின் கிளைகளின் எண்ணிக்கையும் குறையும்
உதரணமாக திருவாரூரில் கனரா வங்கியும் சிண்டிகேட் வங்கியும் மிக அருகருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு வங்கிகளும் இணையப்போவதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. எனில் எதற்கு அருகருகே இரண்டு கிளைகள் ??
சரி புதிதாக கிளைகளை வராதா என்று நீங்கள் கேட்கலாம். வரலாம் ஆனால் எத்தனை புது கிளைகள் வரும் என்பதெல்லாம் வங்கி இணைப்பு நடவடிக்கை முடிவுக்கு பின்னரே தெரிய வரும்
வங்கி தேர்வை மட்டுமே இலக்காக கொண்டு படித்துவருவோர் மாறிவரும் இத்தகைய சூழலை புரிந்துகொள்ளுதல் நல்லது. குறிப்பாக இருக்கும் வேலையை விட்டுவிட்டு போட்டித்தேர்வுக்கு படிக்கிறேன் என்று செல்வது என்னை கேட்டால் இன்றைய நிலையில் சரியான முடிவல்ல. வேலையில் இருந்துகொண்டே முயற்சி செய்தல் உசிதம்...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve