86,000 கோடி கூடுதல் உபரி தொகையை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்
ரிசர்வ் வங்கி அரசுக்கு 1,76,000 கோடி பணம் தருவதாக செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள்.
அது ஏன் என்பதை பற்றிய பதிவு தான் இது..
பொதுவாக ஆண்டுகாண்டு ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி தொகையை அரசுக்கு வழங்கும். அதில் இந்த ஆண்டு வழங்கவேண்டிய தொகை சுமார் ₹ 90,000 கோடி
இந்திய ரிசர்வ் வங்கி 28% உபரி நிதியை வைத்துள்ளது. உலக அளவில் பிறநாட்டு ரிசர்வ் வங்கிகள் 14% மட்டுமே உபரி நிதி வைத்துள்ளன. எனவே உங்களிடம் உள்ள உபரி தொகையை எங்களுக்கு தாருங்கள் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
இந்த கோரிக்கைக்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு உர்ஜித் பட்டேல் அவர்கள் சம்மதிக்கவில்லை. எனவே அவர் ராஜினாமா செய்யும் வரை இந்த கோரிக்கை கிடப்பில் இருந்தது..
பின்னர் திரு சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்ற பின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு பீமல் ஜலன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பணி ரிசர்வ் வங்கியின் உபரி தொகை அளவை எவ்வளவு வைத்திருப்பது என்று பரிந்துரை செய்வது.
அந்த குழுவின் பரிந்துரையை ஏற்ற ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள கூடுதல் உபரி தொகையை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கூடுதலாக ₹ 86,000 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது..
எனவே அரசுக்கு இந்த ஆண்டு வரவேண்டிய தொகை 90,000 கோடி + கூடுதல் உபரி என கண்டறியப்பட்ட ₹ 86,000 கோடி = ₹ 1.76 லட்சம் கோடி அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது..
Comments
Post a Comment
Post ur comments and help us to improve