கல்வி கடன் தள்ளுபடி ஆகும் என்று நம்புபவரா நீங்கள் ??

மாதம் நல்ல சம்பளம் வாங்கும் சில IT நண்பர்கள் கூட தாங்கள் வாங்கிய கல்வி கடனை ஏன் திரும்பி கட்டவேண்டும் ? அது அடுத்த தேர்தலுக்கு பிறகு தள்ளுபடி ஆகிவிடும் என்று நம்புகின்றனர் !

ஒரே காலாண்டில் (Quarter) அரசு துறை வங்கிகள் மட்டும் சுமார் 56,000 கோடி நஷ்டம் என அறிவித்திருக்கும் இந்த மோசமான காலகட்டத்தில் கடன் தள்ளுபடியெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை... (எந்த வங்கி எத்தனை கோடி நஷ்டம் என கீழே இணைக்கப்பட்டுள்ள உள்ள ட்வீட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்)

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.. ஆதார் எண், பான் (PAN) எண், உங்கள் PF account (UAN) என எல்லாமே இணைக்கப்பட்டுவிட்டது. சிம்பிளாக சொன்னால் உங்களின் மாத வருமானம் என்ன என்பது அரசாங்கத்துக்கு நன்றாக தெரியும். மாதம் 50,000 80,000 என சம்பளம் வாங்கிக்கொண்டு கல்விக்கடனில் ஒரு தவணை கூட கட்டாதவரை wilful defaulter (அதாவது கடனை திரும்ப செலுத்த வழி இருந்தும் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் வங்கிகளை ஏமாற்றுபவர், உதாரணமாக விஜய் மல்லையா) என்று அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

கடனை ஒழுங்காக செலுத்தாமல் இருந்தால் Cibil score எனப்படும் உங்களின் தனிப்பட்ட கடன்வாங்கும் தகுதியும் அடி வாங்கும் என்பதையும் நினைவில் கொள்க.. இது பின்னாளில் நீங்கள் வீட்டுக்கடன் போன்ற பெரிய தொகைக்கு வங்கியை அணுகும் பொழுது பெரிய தலைவலியை தரும் என்பதை நினைவில் கொள்க.

மேலே நான் சொன்ன wilful defaulter அறிவிப்பெல்லாம் 2019 தேர்தல் வரை நடக்காது என்று உறுதியாக நம்பலாம். ஆனால் 2019க்கு பின் இப்படி கடனை காட்டாமல் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை.. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறவேண்டாம்..


Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)