புதிய இந்தியா : 1 - நிறுவனங்களை கை கழுவும் ஆடிட்டர்கள்

(இந்தியாவில் ஏற்பட்டு வரும் வரவேற்கப்படவேண்டிய மாற்றங்களை பற்றிய எனது கட்டுரைகள் "புதிய இந்தியா" என்கிற தலைப்பில்)

பல நிறுவனகங்கள் தங்கள் வருமானத்தை உயர்த்தி காட்டி அந்த கணக்குகளை கொண்டு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளன. இந்த கடன்கள் தான் பின்னாளில் வாரக்கடனாக லட்சம் கோடிகளில் இந்திய வங்கிகளை இழுத்து மூடம் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதுபோன்ற பித்தலாட்ட வேலைகளுக்கு நிறுவனங்களுக்கு உதவுபவர்கள் ஆடிட்டர்கள்.

உதாரணமாக A என்கிற நிறுவனம் ஆண்டுக்கு 100 கோடிக்கு turnover செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். நிறுவனமும் அதன் ஆடிட்டர்களும் சேர்ந்து A நிறுவனத்தின் turnover 500 கோடி என்று கணக்குகளை மாற்றுவார்கள். பின் மாற்றிய கணக்குகளை கொண்டு வங்கிகளில் விரிவாக்க திட்டம் என்ற பெயரில் 300 அல்லது 500 கோடிக்கு கடன் பெறுவார்கள்.

வங்கியை பொறுத்தவரை 500 கோடி turnover செய்யும் நிறுவனத்துக்கு 300 கோடி கடன் தருவது ஒன்றும் தவறல்ல. ஆனால் A நிறுவனம் ஆண்டுக்கு செய்யும் தொழிலே 100 கோடி தான். எப்படியும் A நிறுவனத்தால் கடனை திரும்ப செலுத்தமுடியாது. A நிறுவனம் திவால் ஆகும், நிறுவனத்தின் தலைவர்கள் கடன்வாங்கிய பணத்துடன் ஓட்டம் பிடிப்பார்கள். வங்கிக்கு பெரிய நாமம் தான்

இப்படி நிறுவனங்களுக்கு வங்கிகள் கோடிக்கணக்கில் கொடுத்த கடனின் விளைவு தான் வாரா கடன் அளவு 10 லட்சம் கோடிக்கு மேலே சென்றுவிட்டது. இந்திய சட்டத்தின் விசித்திரம் என்னவெனில் தப்பு செய்த A நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாமே தவிர A நிறுவனத்திற்கு உதவிய ஆடிட்டர் நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது :P

இந்திய சட்டங்களில் உள்ள பல்வேறு ஓட்டைகளில் இதுவும் ஒன்று

மோடி அரசாங்கம் இதில் மாற்றம் கொண்டுவர முடிவுசெய்தது. தவறு செய்த நிறுவனம் மட்டுமல்ல அதற்கு உதவிய ஆடிட்டர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதிதாக கொண்டுவந்த companies act 2017ல் சட்ட திருத்தும் மேற்கொண்டது.

இதன் விளைவு கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்களில் இருந்து ஆடிட்டர்கள் வெளியேறி வருகின்றனர். எங்கே நிறுவனம் செய்யும் தவறு வெளியே தெரியவரும் பொழுது நம் மீதும் கிரிமினல் வழக்கு பாயுமோ என்ற அச்சமே இதற்கு காரணம்.

தினமலர் நாளிதழ்  - 10 ஜூன் 2018,  பக்கம் : 12


இனி நிறுவனங்களின் பித்தலாட்டத்துக்கு துணைபோவது நம் பிழைப்புக்கே உலைவைக்கும் என்று ஆடிட்டர்கள் அச்சப்பட துவங்கியுள்ளனர். ஊழலுக்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கையில் companies act 2017 ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும். வரவேற்போம் !!!

#புதியஇந்தியா

ஆதாரங்கள் :

Manpasand to Vakrangee, spate of auditor exits in top listed companies now under govt scanner

Another exit! Inox Wind auditor quits citing 'time constraints'

நிறுவனங்களை கை கழுவும், ‘ஆடிட்டர்’கள் சட்ட நடவடிக்கை பாயும் என அச்சம்


Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)