இந்தியா ஒளிர்கிறது ?

காலை சிற்றுண்டியை முடித்து விட்டு உணவகத்தில் இருந்து வீட்டுக்கு அரசாங்கம் போட்டு தந்த பளபளப்பான நான்கு வழி சாலையின் ஓரமாய் நடத்து வந்துகொண்டு இருந்தோம்.

எங்களுக்கு முன்னே நடந்து சென்று கொண்டிருத்த பெரியவர் (வயது உறுதியாக 70க்கு மேல் இருக்கும்) மயங்கி சரிவதை கண்ட  எனக்கும் நண்பனுக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஓடிசென்று அவரை தூக்கி ஓரமாக நிழலில் உட்காரவைத்தோம். எங்களுடன் உதவிக்கு வந்த நல்ல உள்ளங்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க  அவரையும் அறியாமல் பசிக்குது என்றார்.

10 அடி தூரத்தில் ஹோட்டல் ஆனால் அவரால் நடக்க முடியவில்லை. ஓடி சென்று 4 இட்லி வாங்கிவந்தோம். அவருக்கு இருக்கும் பசியில் பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து வரும் மோசமான வாடையை அவர் பொருட்படுத்தவில்லை.

உங்க வீட்ல உள்ளவங்க போன் நம்பர் இருந்த சொல்லுங்க ஐயா நாங்க அவங்கள வரசொல்றோன்னு சொன்ன பொழுது போன் நம்பர் கொடுத்தா செத்து போன உன் பொண்டாட்டி கிட்ட பேசப்போறியா என்று பெத்த மகன்கள் கேட்டதாக சொன்னார் பெரியவர்.

பாவம் அவர் மகன், மனிதனை என்றும் இளமையாய் வைத்திருக்கும் சோமரசம் போன்ற மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை என்பதை மறந்துவிட்டார் போலும்.

 


சென்னைக்கு வேலை தேடிவந்து ஏமாற்றப்பட்டு மூன்று நாட்களாக உணவே சாப்பிடாமல் ரோட்டில் அலைவதாக சொல்லிக்கொண்டே ஒரு இட்லியை கூட முழுவதும் சாப்பிட்டிருக்க மாட்டார் பெரியவர் மேலே மரத்தில் இருத்த காக்கை மிகச் சரியாக அவரது இட்லியின் மேல் தனது எச்சத்தை விட்டது.

பெற்ற பிள்ளைக்கு தான் இந்த கிழவன் மேல் வஞ்சம் உனக்கென்ன காக்கையே என்பது போல் இருந்தது அந்த பெரியவரின் பார்வை மொழி.

செல்போன் டவர்கள் வைத்து மனிதர்கள் சிட்டு குருவியை அழித்த பொழுது இந்த காக்கை இனம் எப்படி தப்பின என காக்கைகள் மேல் கோவம் வந்தது எனக்கு.

பெரியவர் அந்த எட்சத்தையும் பொருட்படுத்தாது அடுத்த துண்டு இட்லியை வாயில் வைக்க சென்றார்.

ஒரு பக்கம் பணத்தின் மதிப்பு தெரியாமல் ட்ரீட் என்ற பெயரில் ஒரே வேலை உணவுக்கு 20,000 செலவு செய்யும் எங்களை போன்ற IT கூட்டம். இன்னொரு பக்கம் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் புலி படம் flop என கேக் வாங்கி கொண்டாடும் பைத்தியக்கார கூட்டம். இன்னொரு பக்கம் மூன்று நாள் உணவு உண்ணாமல் ரோட்டில் சரியும் முதியவர்

இந்தியா ஒளிர்கிறது ? 

Comments

  1. India yeppavum ithu mathi vishayathula olirnthu kondey irukum....

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)