கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது ?

ஒரு விஷத்தை பற்றி  கருத்தாக்கம் (opinion) மக்களிடம் எப்படி உருவாகிறது என்று ஆராயவேண்டும் என்று ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு.

உதாரணமாக மூன்று வித்தியாசமான நிகழ்வுகளை நான் அலச விரும்புகிறேன் :

உதாரணம் #1:
புலி படத்தை எடுத்துக்கொள்ளலாம். புலி படம் ப்ளாப் என்பது படம் பார்க்காத எனக்கும் இப்பொழுது மனதில் பதிந்து விட்டது. காரணம் தெரியவில்லை. எல்லாரும் சொல்றாங்க எனக்கும் அப்படியே !

உதாரணம் #2:
சரி இன்னொரு சீரியஸான நிகழ்வை அலசுவோம்.

விஜயகாந்த் வெறும் நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த வரை அவரை தலையில் வைத்து கொண்டாடியது தி.மு.க வின் குடும்ப சேனலான  சன் டிவி. நடிகர் சங்க கடன்களை அடைக்க வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தும் ஐடியாவை புகழ்ந்து விஜயகாந்தை உச்சத்துக்கு எடுத்து போனதில்  சன் டிவி பங்கு கனிசமானது.

சரி அதே விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டார் . அசுர வேகமாக வளர்ந்தார். எதிர்கால முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெரும் அளவுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றார்.

ஆனால் கலைஞர், ஜெயலலிதா இருவர் மட்டுமே எப்பொழுதும் தமிழக முதல்வர் வேட்பாளர்கள் என்பதை நிலை நாட்ட விஜயகாந்த் டம்மி ஆக்கப்படவேண்டும்.

அவரை டம்மி ஆக்கவேண்டிய கடமை தி. மு. க விற்கும், அ.தி. மு. க விற்கும் இருந்தது. பார்த்தார்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் படமெடுத்தார்கள். காமெடி நடிகர்கள் ரோட்டில் இரக்கப்பட்டார்கள்.

விஜயகாந்த் காமெடி பீஸ் என தங்களிடம் இருக்கும் அனைத்து சேனல்களில் திரும்ப திரும்ப சொன்னார்கள். விஜயகாந்த பேசினாலே அவர் குடித்து விட்டு உளறுகிறார் என்று நம்பவைத்தார்கள். சில வீடியோ காட்சிகள் 10 முறைக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டது.

vijayakanth funny images digitalnative

விஜயகாந்தை ஒரு காமெடி பீஸ், குடித்து விட்டு உளறுபவர் என்ற ஒரு கருத்தாக்கம் நம்மையும் அறியாமல் நம் மனதுக்குள் பதிந்து விட்டது. தற்போதைய சூழலில் வருங்கால முதல்வர் பதவி பட்டியலில் இருந்து விஜயகாந்த் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

உதாரணம் #3:

கிரீன் பீஸ் என்ற NGO நிறுவனம் மீது மத்திய அரசு 2014 லில் இருந்தே கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் வங்கி கணக்குகளையும்  முடக்கியுள்ளது. காரணம் கிரீன் பீஸ் அமைப்பு இந்தியாவின் பொருளாதாரத்திற்கே பெரிய அச்சுறுத்தல் என்று இந்திய உளவுத்துறை அமைப்பான IB - Intelligence Bureau சமர்ப்பித்த அறிக்கை தான்.

படிக்க: IB report to PMO: Greenpeace is a threat to national economic security - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

ஆனால் சமீபத்தில் தமிழ் ஹிந்து நாளிதழ் கிரீன் பீஸ் NGO நிறுவனத்துக்கு ஆதரவாக நடுப்பக்க கட்டுரை எழுதியது.

படிக்க: கருப்பு ஆடுகளை மட்டும் தண்டியுங்கள்! - தி ஹிந்து தமிழ்

இது என்னடா கூத்து ? கிரீன் பீஸ் போன்ற அமைப்பை ஆதரித்து ஏன் ஹிந்து போன்ற பிரபலாமான பத்திரிக்கை செய்தி எழுத வேண்டும் என்று எண்ணிய நான் ஹிந்து இணைய கட்டுரைக்கு கீழே கமெண்ட் ஒன்றை பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்த கமெண்ட்:

"இந்த கட்டுரையை படிக்கும் முன் நண்பர்கள் கூகிள் தளத்தில் இந்திய உளவுத்துறையான IB அமைப்பு கிரீன் பீஸ் அமைப்புக்கு எதிராக சமர்ப்பித்த அறிக்கையை படித்து விடுங்கள்.(ஒரு வேலை இந்திய உளவுத்துறைக்கும் கிரீன் பீஸ் அமைப்புக்கும் தனிப்பட்ட பகை என நம் பத்திரிக்கைகள் சொன்னாலும் சொல்லும்) 

கிரீன் பீஸ் அமைப்பால் இந்தியாவின் மொத்த ஜிடிபி யில் 2-3% சதவீதம் வரை பாதிக்கிறது என்கிறது என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட். ஏற்கனவே இந்தியாவின் நிலக்கரி வெட்டி எடுத்தல், அனல் மின் நிலையங்கள் மற்றும் அணு மின் நிலையங்களுக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் கிரீன் பீஸ் அடுத்ததாக இந்தியாவின் ஐடி துறையின் ஈ வேஸ்ட் (E- waste) எதிராக போராட்டம் என திட்டம் தீட்டி இருப்பதையும் IB அறிக்கை சுட்டி காட்டுகிறது. இவற்றின் மூலமே கிரீன் பீஸ் இந்தியாவின் வளர்ச்சியை குறிவைக்கும் ஒரு அமைப்பு என்பது அம்பலமாகும். 

இதே கிரீன் பீஸ் அமெரிக்காவில் செயல்படும் 99 அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட தயாரா ? 

ஹிந்து பத்திரிக்கை மோடி எது செய்தாலும் எதிர்க்கிறேன் பேர்வழி என்று இப்படி தன் தரத்தை குறைத்து கொண்டுள்ளது.நல்ல விஷயங்களை என்றுமே நாம் ஆதரிக்காவிட்டாலும்  எதிர்க்காமல் இருக்கலாம். "

என்ன ஆச்சரியம் நான் பதிவு செய்த கமெண்ட் தமிழ் ஹிந்து இணையத்தளத்தில் கடைசி வரைக்கும் பதிவேற்ற படவில்லை.

ஒரு சந்தேகத்துடன் இன்னொரு soft corner கமெண்ட் போட்டேன். உடனே பதிவேற்றப்பட்டுவிட்டது. அப்படி எனில் நான் முதலில் போட்ட கருத்து வேண்டுமென்றே அழிக்கப்பட்டது அல்லது மறைக்கப்பட்டது.

பொதுவாக இணையத்தில் நாளிதழ் படிக்கும் பலரும், மக்கள் இந்த செய்தி பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய கமெண்ட் பகுதியையும் கண்டிப்பாக ஒருமுறை படிப்பர்.

ஆனால் கமெண்ட் பகுதியில் முழுக்க முழுக்க செய்தி நிறுவனம் தனக்கு சாதகமானவற்றை மட்டும் அனுமதிக்கிறார்கள். பேருக்கு ரெண்டு மூன்று எதிர்ப்பு கமெண்ட் இருக்கும் அவளாவே.

ஆனால் செய்தியை படிப்பவர் கீழே கமெண்ட் பகுதியை பார்க்கும் பொழுது ஏதோ மக்கள் அனைவருமே மேலே போட்ட செய்தியை ஆதரிக்கிறார்கள் என்ற மாய தோற்றத்தை உருவாக்கி உங்களுக்குள் அதே கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள்.

மோடி மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனால் அது வெறுப்பாக மாறி மக்கள் அவரை தூக்கி எரிய தினமும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயன்று ஹிந்து நாளிதழ் அதில் நல்ல வெற்றியும் பெற்றுள்ளது என்றே சொல்லாம்.

பொதுவாக கருத்தாக்கம் என்பது  ஒருவிஷயத்தை விவாதிப்பதன் மூலமும் சுயமாக ஆராய்வதன் மூலமும் உருவாகவேண்டும். ஆனால் இந்தியாவில் மீடியா திணிப்பே மக்கள் கருத்து என்று ஆகிவிட்டது.

இது தவிர்க்க படவேண்டும். மீடியா என்ன சொன்னாலும் அதை பரிசீலித்த பிறகே நாம் ஏற்கவேண்டும். அதுவே தேசத்துக்கு நல்லது ! நமக்கும் ! 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)