முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ ?

திருடனோ தீவிரவாதியோ சுட்டு கொல்லப்பட்டால் ஓடிவரும் எந்த மனித உரிமை அமைப்பும், திருடன் அல்லது தீவிரவாதியால் போலீஸ்காரர்கள் மடியும் பொழுது வரமாட்டார்கள்.

பீப் சாங் போட்டால் பற்றிக்கொண்டு கொண்டு வரும் மாதர் சங்கம் எதுவும், பெண்களுக்கு ஆண்களை விட ஊதியம் குறைவாக தரப்படும்பொழுதோ, ஸ்வாதி போன்றவர்கள் வெட்டி கொல்லப்படும் பொழுதோ எங்கே போவார்கள் என்று தெரியாது.

கோவில்பட்டியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வரும் அதுவும் விடியற்காலை மூன்று மணிக்கு. ஆனால் அதே ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் பெப்சி மற்றும் கோலா நிறுவனம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து குளிர்பானம் தயாரித்து விற்றால் சொரணை இல்லாமல் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நாம்.

முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ ?


முரண்பாட்டின் மொத்த உருவமே நாம்தானோ என எண்ண தோன்றுகிறது !

கண்முன்னே நடக்கும் இந்த நிகழ்வுகளை சேர்த்து பார்ப்பதில் தான் நமது கல்வி அறிவு மண்ணை கவ்வுகிறது

தவறு என்று தெரியும் ஆனால் நான் மாறினால் எல்லாம் மாறிவிடுமா என்று படித்த மேதாவிகள் தான் கேட்கிறார்கள். நாம் மேதாவிகள் அல்ல பன்னாட்டு நிறுவன ஆய்வகத்தின் எலிகள் !

இறுதியாக ஒரு வார்த்தை மாற்றம் தனி மனிதனிடம் இருந்து தான் தொடங்குகிறது. சந்தேகம் இருந்தால் பைபிள் ,கீதை, விவேகானந்தர், கலாம் என எவரையும் படித்து பாருங்கள்.   

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்