2016 சென்னை புத்தக கண்காட்சி
சென்னை தீவு திடலில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 39 வது புத்தக கண்காட்சிக்கு சென்று வந்த அனுபவத்தை பகிர்கிறேன் !
மெரினா வழியாக ப்ராட்வே திசையில் செல்லும் எல்லா பேருந்துகளும் தீவு திடலில் நின்று செல்கின்றன !
சுமாரான கூட்டம் !
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ் !
60 வருடங்களை கடந்தும் இன்னும் பொன்னியின் செல்வன் தான் பல புத்தக கடைகளின் முகப்பில் முதல் புத்தகமாக நம்மை வரவேற்கிறது !
விகடன், கிழக்கு பதிப்பாக புத்தகங்களை பல கடைகளில் பார்க்கமுடிந்தது. ஆங்கில புத்தக கடைகளில் சிவா முத்தொகுதி (Shiva Trilogy) புத்தகத்தை பரவலாக பார்க்கமுடிந்தது !
பொன்னியின் செல்வன், முகலாயர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும், கோபிநாத், அப்துல் கலாம், ஜி. ராமகிருஷ்ணன், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சுஜாதா புத்தகங்கள், யவன ராணி, சென்னையின் கதை இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்கள் தோரயமாக 90 சதவீத கடைகளில் நீங்கள் பார்த்து சலித்து போக வாய்ப்புண்டு !
பல கடைகள் வெளியே இருந்து பார்த்தாலே இந்த புத்தகங்கள் தான் பரவலாக பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் கொள்ளை பற்றி பேசும் புத்தகங்களின் விற்பனைக்கு உதவும் பொருட்டோ என்னவோ காபி 20 ரூபாய், ஐஸ் கிரீம் 30 ரூபாய் என விற்கிறார்கள்.
பற்று மற்றும் கடன் அட்டை (Debit & Credit card) பயன்படுத்தி புத்தகங்களுக்கு பணம் கொடுக்கலாம் என நம்பி செல்லவேண்டாம். பாதி இடத்தில் அவை வேலை செய்யவில்லை என்பதை விட புத்தக விற்பனையாளர் எலக்ட்ரானிக் முறையிலான பணம் செலுத்துதலை விரும்பவில்லை என்பதே உண்மை !
சில தமிழ் புத்தக கடைகள் காற்று வாங்குகிறது. விகடன், கிழக்கு, கண்ணதாசன், வானதி பதிப்பகங்களில் குறைவில்லாமல் கூட்டம் இருந்தது. ஆங்கில புத்தக கடைகளில் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது !
புதிய வரவு எனில் தமிழ் ஹிந்து நாளிதழில் நடுப்பக்க கட்டுரை எழுதும் சமஸ் அவர்கள் எழுதிய புத்தகங்கள் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
அமேசான் நிறுவனத்தின் kindle விற்பனை அரங்கில் விசாரித்ததில் சுமார் 20,000 தமிழ் புத்தகங்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டு வருவதாக சொன்னார்கள்.
அனைத்து கடைகளையும் சென்று பார்க்க எண்ணினால் குறைந்தபட்சம் 3.30 மணி நேரம் தேவைப்படும்.
நான் வாங்கிய புத்தகங்கள் :
வாங்க தவறிய புத்தகங்கள்:

- அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ இராமசாமி
- நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்
- விசும்பு - ஜெயமோகன்
- முல்லை பெரியாறு அணை பிறந்த கதை - விஜயபத்மா
- முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் - கௌதம சித்தாந்தன்
- நால்வர் வரலாறு - கிருபானந்த வாரியார்
- ஆலயம் ஏன் - கிருபானந்த வாரியார்
- ரத்தன் டாட்டா - என். சொக்கன்
- 6174 - க. சுதாகர்
- உன்னோடு ஒரு நிமிஷம் - வெ. இறையன்பு
- தமிழக பொது தேர்தல் வரலாறு - ஆர். முத்துக்குமார்
வாங்க தவறிய புத்தகங்கள்:
- MGR Image Trap
- கூவம், அடையாறு, பக்கிங்கம் கால்வாய் புத்தகம்
- விஷ்ணுபுரம்
- சுஜாதாவின் புறநானூறு எளிய விளக்கம்
- தஞ்சாவூர் - குடவாயில் பாலசுப்ரமணியன்
- ராஜராஜேஸ்வரம் - குடவாயில் பாலசுப்ரமணியன்
- இலங்கை பிளவுண்ட தீவு
- ஹர்ஷா போகலே வின் கிரிக்கெட் புத்தகம்
- செங்கிஸ்கான்
- நான் ஏன் பிறந்தேன் - எம். ஜி. ஆர் சுயசரிதை
- ஜாலியா படிக்கலாம் தமிழ் இலக்கணம்
- யவன ராணி மற்றும் பல.................................................
சின்ன சின்ன குறைகளை தள்ளிவிட்டு பார்த்தால் புத்தக கண்காட்சி திருப்தியான விடுமுறை விஜயமாகவே அமைந்தது !
எளிமையாக சொன்னால் மகிழ்ச்சி !
Comments
Post a Comment
Post ur comments and help us to improve