கல்வி கடன்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு
ஸ்டேட் பேங்கில் வாங்கப்பட்ட கல்வி கடனில் வசூல் செய்வது கடினம் என்று முடிவு செய்யப்பட்ட கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது ஸ்டேட் பேங்க் நிர்வாகம்.
தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் வாங்கிய கடன் தொகை 17000 கோடி. இதில் 1875 கோடி கடன் மோசமான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு 381 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளது.
இனி இந்த கடனை மாணவர்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வசூல் செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் பொதுவாக கடனை வசூல் செய்ய எத்தனை தூரத்திற்கு செல்லும் என்பதற்கு குண்டர்கள் வைத்து மிரட்டுவது முதல் போலீஸை ஏவி விவசாயியை தாக்கிய வரை பல உதாரணங்கள் உண்டு.
ஊரே என்ஜினீயரிங் படித்து இன்று அதில் பாதிப்பேருக்கு மேல் சரியான வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில் மாணவர்கள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விஜய் மல்லையாவை பிடிக்க துப்பில்லாத இந்த அரசாங்கமும் அரசு வங்கிகளும் சாமானியர் பாக்கெட்டில் கைவைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். நமது மோசமான கல்வித்திட்டத்தில் இருந்தும் சாமானியரை சுரண்டும் அரசுகளிடம் இருந்தும் ஆண்டவன் தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.

Comments
Post a Comment
Post ur comments and help us to improve