முதல்வன் பட பாணியில் கிரண் பேடி

புதுச்சேரி மின்சார வாரியத்துக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் என 25,000க்கு மேற்பட்டோர் சுமார் 120 கோடி ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.

அதிரடிக்கு பெயர் போன புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி பல மாதங்களாக மின்பாக்கி வைத்திருப்பவரின் பெயர்கள் செய்தித்தாள் மற்றும் FM ரேடியோவில் வெளியிடப்படும் (Name & Shame Campaign) என தடாலடியாக அறிவிக்க, அறிவிப்பு வெளியான தினத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் ரூபாய் பாக்கி வசூல் ஆனது. (படிக்கhttps://www.deccanchronicle.com/nation/current-affairs/270618/pondicherry-electricity-dept-collects-rs-14-lakh.html)

அடுத்தடுத்த நாட்களில் பலரும் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்பி கட்ட சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு நான்கே நாட்களில் வசூல் ஆனது. இதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் திருப்பி செலுத்திய தொகை சுமார் 2 கோடி ரூபாய் ! 


அடுத்து பல ஆண்டுகளாக வசூல் ஆகாமல் உள்ள 15 கோடி ரூபாய் சொத்து வரியை இதே பாணியில் வசூல் செய்ய உள்ளதாக கிரண் பேடி அறிவித்துள்ளார்

இதே போன்ற நடவடிக்கையை முதல்வன் படத்தில் அர்ஜுன் எடுத்தபொழுது நமக்கு உடம்பு சிலிர்த்தது. இப்படியெல்லாம் நடக்காத என்றுதான் எல்லோரும் ஏங்கினோம். ஆனால் நிஜத்தில் அதையே செய்து காட்டும் பொழுது கண்டுகொள்ள தான் ஆள் இல்லை.. 

கவனிக்க : புதுச்சேரி முதல்வருக்கு புதுச்சேரி கவர்னரை விட அதிகாரம் குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் கிரண் பேடிக்கு என்ன வேலை ????

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)