பணம் தின்னி கழுகுகள்

தமிழக தலைநகரத்தின் விடியல் வெடி சத்தத்துடன் துவங்கியது .

காலை 7.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுஹாத்தி செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததை செய்தி சேனல் வழியாக நாம் பார்த்தோம் .

இந்த செய்தியை சேனல்கள் காட்டிய விதத்திலேயே அவர்களின் வியாபார உத்திகளையும் கீழ்த்தரமான குணத்தையும் உணர முடிந்தது .

சுவாதி என்ற பெண்  ஒருவர் இறந்ததாக மட்டுமே உறுதி  செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு செய்தி சேனல் முதலில் 50 பேர் பலி எனவும் பின்னர் 15 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது எனவும் சக பயணிகளையும் சாக பயணிகளின் குடும்பத்தாரையும் பதைபதைக்க வைத்து அரசியல் லாபம் தேடுகிறது .

சாகாத பலரை சாகடித்தது அரசியில் லாபம் தேடுவது தான் சமூக சிந்தனையா ?

digital native

மற்றொரு தனியார் டிவி ஒருபடி மேலே சென்று சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு விபத்து Exclusive உங்கள் ***** டிவியில் மட்டும் என்று எதோ சினிமா பட விளம்பரம் போல குண்டுவெடிப்பின் கோரத்தை பணமாக்கி கொண்டு'இருக்கிறது .

ஒருவேளை வெடிகுண்டு வெடித்தால் தீவிரவாதிகளை விட அதிகம் சாந்தோஷப்படுவது நமது செய்தி சேனல்களாக தான் இருக்கும் போல.

பணம் தின்னி கழுகுகள் !


Comments

  1. Now everything became media.even media helping in many ways sometimes ,it creates some problem also...we cant reduce these things rather we can understand the media society.

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)