வாலி வார்த்தை ஜாலங்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஆழமான நட்பு இருந்தது. ஆனால் தொழில் ரீதியான போட்டியும் இருந்தது.கவிஞர் வாலி எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியர் என்பது உலகம் அறிந்தது. ஆனால் அவர் சிவாஜி படங்களுக்கும் பாடல் எழுதி வந்தார்.

vaali

 சிவாஜி நடிப்பில் தயாரான படம் "அன்புக்கரங்கள்". அந்த படத்தின் பாடல்களை வாலி எழுதினர்.

எம்.ஜி.ஆர் வாலியை சந்தித்த பொழுது வாலியிடம் கேட்டார்

"உங்க அன்புக்கரங்கள் எப்போ ரிலீஸ் ? " புன்னகையுடன் 

"உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று வாலி சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

வார்த்தை ஜாலங்களால் வாத்தியாரையே மடக்கியவர் கவிஞர் வாலி ... !


Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

ஒரு Doubt - என் சிறுகதை