அலெக்ஸாண்டரும் பூனையும்

கவர்ன்மென்ட் ஆபீஸ்ல ஒரு செர்டிபிகேட் வாங்கவே paragaon ஆபீஸ் செப்பால் போடணும் , இப்படி பேர்வாங்குன நம்ம அரசாங்கம் திடிர்னு வேக வேலைசெய்யுது ?

அதுவும் ஒரு தவறு செய்த தூதரக அதிகாரியை காப்பாற்ற  ? விசா  மோசடியில் ஈடுபட்ட  தூதரக அதிகாரி தேவயாணியை காப்பற்ற அமெரிக்க தூதரக பாதுகாப்பு ரத்து, தூதரக அதிகாரிகள் சிறப்பு சலுகைகள் ரத்து, நீ தேவயானிய ரிட்டன் அனுப்புறிய ? உன் தூதர நான் அனுப்புறேன் என்று புல்லட் ரயிலாக பாய்கிறது (மெட்ரோ லேட்டாகும், அதான் புல்லட் ) இந்திய அரசாங்கம். தேவயாணியை இந்திய கொண்டுவரலேனா பார்லிமென்ட் பக்கமே தல வச்சும் படுக்கமாட்டேன்னு சொல்ற வெளியுறவு துறை மந்திரி ?

உலகின் முதலாளி என்று நினைத்து கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இதுவரை ஆமாம் சாமி மட்டும் போட்டு வந்த இந்தியாவா இது ?

இந்தியாவிற்கு தெரியும் தன் பலம் என்னவென்று , அமெரிக்க இருக்கும் நிலையில் ஆசியாவில் இந்தியாவை விட்டால் எவரும் நேசக்கரம் நீட்ட தயாரில்லை. அதுவும் சீனாவுக்கு பக்கத்தில் ஒரு நண்பன் தலைகீழ நின்று தண்ணீர் குடித்தாலும் கிடைக்காது .

ஆம் இந்தியா அவர்களுக்கு முக்கியம். அதை பயன்படுத்தித்தான் இந்திய தனது தூதரக அதிகாரிக்காக அமெரிக்காவை எதிர்க்க துணிந்தது .

இலங்கை ஒரு தீவு நாடு, இந்தியாவை அதோடு ஒப்பிட்டால் 10 ல் ஒரு பங்கு என்று கூட சொல்லமுடியாது. ஆனால் இலங்கை தூதர் இந்திய தலைநகரில் நின்று கொண்டு  இந்தியாவை மிரட்டுகிறார் "இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்குபெறாவிட்டால் உலக அரங்கில் இந்தியா தனித்து விடப்படும் " என்கிறார்

உண்மை இந்தியாவிற்கு இலங்கையை கேள்வி கேட்க துணிவில்லை, அங்கே போர் என்ற பெயரில் இரண்டு பிடிவாதகாரர்கள் சண்டையில் அப்பாவிகள் கொன்றதை கேட்க துணிவு  இல்லை.

சரி, அது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் என்று விட்டுவிடுவோம்.  செய்திதாள்கள் தமிழக மீனவர் தாக்கப்பட்டனர் என்ற செய்தி போட்டே அலுத்து போகும் அளவுக்கு தினசரி நிகழ்வாகி விட்டது அதை கேட்க கூட துணிவில்லையா ?

இல்லை 
alexander

அலெக்ஸாண்டர்  உலகை ஆளவேண்டும் என்ற துடிப்பில் உலகின் பாதியை நிர்மூலம் ஆக்கியவன். விஷம் வைத்து கொல்லப்பட்டான் என்று 2000 ஆண்டுகளுக்கு பிறகு அவனை பற்றி உலகம் பேசும் மாவீரன். ஆனால் அலெக்ஸாண்டர்க்கு பூனையை கண்டால் பயம் , பூனையை பார்த்தல் ஒரு ஓட்டமாய்  ஓடிப்போய் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு பயம்.

அலெக்ஸாண்டரும் பூனையும் , இந்தியாவும் இலங்கையும்

Comments

  1. Really superb article, the way it had been written is also superb... the subject is also very true so pl everyone share your views....

    Keep writing.... All the very best boss ! ! !

    ReplyDelete
  2. Very nice.. your writing is super.. Keep writing...

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)