நாங்க ரொம்ப பிஸி

தப்போ சரியோ ! மெஜாரிட்டி இருந்தால் எதுவும் செய்யலாம் இதுவே ஜனநாயகத்தின் சறுக்கல்.

எதையும் செய்ய ஒரே தேவை மெஜாரிட்டி அவ்ளவே !

இஸ்ரோ (ISRO ) இந்தியாவின்  புகழை உலகை தாண்டி நிலவிலும் செப்டம்பரில் செவ்வாய் கோளிலும் நிலைநிறுத்த இருக்கும் பெருமைக்குரிய அமைப்பு.

இந்தியாவிடம் விண்வெளி ராக்கெட்டுகளை அனுப்ப இரண்டு ஏவுதளம் உள்ளது. தற்பொழுது மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் தளம் அமைக்க முடிவு செய்யபட்டுள்ளது. நல்ல விஷயம்தான் செய்யலாமே என்றால் அங்கேதான் மனிதனின் இனப்பற்று, மாநிலப்பற்று, மானம்கெட்ட பற்றெல்லாம் பற்றிக்கொண்டது.

இஸ்ரோ 3 வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்தெடுத்த இடம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம்.

தமிழ்நாடா ? செட் ஆகாதே என கூறுகிறது இஸ்ரோ விண்வெளி கமிட்டி.

என் பாஸ் அப்படின்னு கேக்ககூடாது .

இஸ்ரோ விண்வெளி கமிட்டி உறுப்பினர் மெஜாரிட்டி பெருமக்களுக்கு புடிக்கல .

காரணம் பல லாபங்களை தரக்கூடிய ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொடுக்க ஆந்திரா விஞ்ஞானிகள் பெரும்பான்மை கொண்ட இஸ்ரோ விண்வெளி கமிட்டிக்கு மனசில்லை. அவர்களது எண்ணம் அந்த 3 வது ராக்கெட் ஏவுதளத்தையும் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டவிற்கு பெறுவது என்பதே. (ஏற்கனவே உள்ள இரண்டு ஏவுதளமும் ஸ்ரீஹரிகோட்டவில் தான் உள்ளது )

என்னே உங்கள் மாநிலப்பற்று !

பாவம் அந்த கமிட்டியில் ஒரு ஒரு தமிழ்நாட்டு விஞ்ஞானி தான்.

சிங்கம் சிங்குல ஒன்னும் பண்ணமுடியாது காரணம் இது ஜனநாயகம், இங்கே ஒரே தேவை மெஜாரிட்டி.

சரி தமிழ்நாட்டில் இஸ்ரோ செய்ற இந்த மெஜாரிட்டி விளையாட்டுக்கு யாராவது எதிர்ப்பு குரல் கொடுப்பார்களா  என்று பார்த்தல் குரல்கள் எக்கச்சக்கமா கேக்குது மெஜாரிட்டி குரல் இளைஞர் குரல்  ( பட் குரல் கேட்டது ஜில்லா படம் ஓடற தியேட்டர்ல)

நாங்க ரொம்ப பிஸி !!!!

 என் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கவேண்டும் ?அங்கே அமைப்பதால் தமிழ் நாட்டுக்கு என்ன லாபம் ?

இதைப்பற்றி விரிவான பதில்களை தரும் ' தி இந்து ' நாளிதளின் கட்டுரை 

ஆந்திராவுக்கு 'கடத்தப்படும்' ராக்கெட் ஏவுதளம்!

 ஆங்கிலத்தில் படிக்க 

Kulasekarapattinam’s ideal launch pad  





Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)