ஆம் ஆத்மி - அமெரிக்க தொடர்பு ? ஐந்தாம் படை போர்
ஐந்தாம் படை போர் :
ஐந்தாம் படை போர் என்பது ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு நடத்தும் மறைமுக போர் அல்லது சதி என்று கூறலாம்.
ஐந்தாம் படை போர் என்றால் என்ன என்பதற்கு தினமலர் நாளிதழ் கூறிய விளக்கம் இதோ
ஐந்தாம் படை போர் போர்க்கள் பொதுவாக தொண்டு நிறுவனங்கள் (என் ஜி ஓ ), மனித உரிமை அமைப்புகள் கொண்டே அமைக்கப்படுகிறது.
"உங்கள் நாட்டுக்கு எதிராக புரட்சி செய்யுங்கள் " என்று எந்த நாடும் சொல்லாது. அதற்கு பதிலாக "உங்கள் நாட்டில் மக்களின் உரிமைகள் போதுமானதாக இல்லை.அவற்றை அதிகரிக்கும் திட்டங்களில் ஈடுபடுங்கள். நாங்கள் நடத்தும் பயிற்சி பட்டறைகள், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழி முறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம்"என்று வலைவீசும்.
இவற்றில் சிக்குபவர்கள், வெளிநாடுகளில் சொல்லித்தந்த வழிமுறைகளை தங்கள் நாட்டில் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். 'மக்களுக்கான உரிமை போராட்டம்' என்ற பெயரில் அவை நடத்தப்படும் என்பதால் மக்கள் ஆதரவு பெருகும். இந்த போராட்டம் ஆளும்கட்சிக்கு தானே எதிராக உள்ளது என்று எண்ணி எதிர்கட்சியும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தரும். ஒரு கட்டத்தில், ஒட்டு மொத்தமாக அணைத்து கட்சிகளும் இவர்களுக்கு எதிராக திரும்பும் பொழுது இந்த அமைப்புகளே புது கட்சியாக புது அவதாரம் எடுத்து உள் நாட்டு புரட்சியை தூண்டும்.
தேர்தலில் குதிக்கும் இவர்கள் ஓட்டுகளை சிதறடித்து அதன் மூலம் தேர்தல் முடிவுகளில் இழுபறியை ஏற்படுத்தி , பலவீனமான அரசை ஏற்படுத்த வழிவகுக்கும். பலவீனமான அரசால் எந்த முடிவையும் உறுதியாக எடுக்க முடியாது என்பதால், நாடே பலவீனமாகி விடும். "
இந்த விளக்கத்தை நீங்கள் படிக்கும் பொழுதே உங்களுக்கு யாரோ நினைவுக்கு வருகிறார்களா ?
ஆம் ஆம் ஆத்மி செய்ததும் இதைத்தான் . ஒரு பிசுகு கூட இல்லாமல் மேலே சொன்னது அப்படியே நடந்தது ஆம் ஆத்மி வரலாற்றில்.
அவர் கூறும் சில விசித்திர கோரிக்கைகளை சிந்தித்தல் அவர் பின்புலம் உங்களுக்கு புலப்படும்.
- காஷ்மீர் இந்தியாவோடு இணைந்து இருக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
- காஷ்மீரில் இராணுவம் இருக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தவேண்டும் .
- நக்சல் பகுதிகளில் துணை இராணுவம் இருக்கலாமா என்று அந்த பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.
- அதிகாரிகளுக்கு எதுராக மக்களே ஸ்டிங் ஆபரேஷன் செய்யவேண்டும் (அப்பறம் லஞ்ச ஒழிப்பு துறை எதற்கோ ?)
அரவிந்த் கெஜர்வால் அமெரிக்க என் ஜி ஓ களின் கைக்கூலி என்று என எண்ண தோன்றுகிறது.
அதற்கு எளிமையான உதாரணம் அமெரிக்க என் ஜி ஓ களால் ஊக்குவிக்கப்பட்ட கூடங்குளம் போராட்டத்துக்கு அரவிந்த் கெஜர்வால் தரும் ஆதரவு. 300 நாட்களாக யாருமே வேளைக்கு போகாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்த அவர்கள் பில் கேட்ஸ் போன்று பணக்காரர்கள் இல்லை. அங்குள்ள மக்கள் அனைவருமே அன்றாட சாப்பாட்டுக்கு மீன் பிடிக்கும் தொழிலார்கள்.
ஆனால் வேலைக்கே போகாமல் அவர்கள் வீட்டு அடுப்பு எறிகிறது என்றால் வெளியில் இருந்து யாரோ பணஉதவி தராமல் கண்டிப்பாக போராட்டம் நடத்த முடியாது . இந்த விவகாரத்தை விசாரித்த இந்திய அமலாக்க பிரிவு உதயகுமார் அமெரிக்காவில் என் ஜி ஓ களால் இரண்டு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டவர்.அவர்கள் கொடுக்கும் பணத்திலேயே போராட்டம் நடத்தப்படுகிறது . இதை நான் கூறவில்லை இந்தியாவின் பிரதமர் கூறுகிறார்
பிரதமர் கூறிய செய்தி இதோ
http://www.ndtv.com/article/tamil-nadu/pm-blames-american-ngos-for-kudankulam-power-plant-protests-179285
http://www.deccanherald.com/content/217953/is-kudankulam-protest-motivated.html
உதயகுமார் போராட்டத்தையும் தினமலர் கூறும் ஐந்தாம் படை விளக்கத்தையும் நன்றாக ஒப்பிட்டு பாருங்கள்.
இப்பொழுது வரும் செய்தி ஆம் ஆத்மி கட்சியில் உதயகுமார் இனைய போகிறார் என்பதே, பின்னே என்ன கூட்டாளிகள் ஒன்று சேர வேண்டாமா ?
ஒன்று உண்மை பேராண்மை படத்தில் ஜெயம் ரவி சொல்லும் வசனம் போல இந்தியாவை பல உலகநாடுகள் குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். இந்தியா அவர்களுக்கு சவால். அது வல்லரசு ஆவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்தியாவின் பலமே அதன் இளைஞர் சக்தி தான். எனவே அந்த சக்தியை திசை திருப்ப முயல்கிறார்கள். அதற்கு ஆம் ஆத்மி ஒரு சான்று. கூடங்குளம் ஒரு பெரிய சான்று.
நான் கூறியதை நீங்கள் இப்பொழுது நம்பாவிட்டால் பரவாவையில்லை உதயகுமார் ஆம் அத்மியில் இணைந்தார் என்று செய்தி இன்னும் சில மாதத்துக்குள் வரும் பொழுது இந்த கட்டுரையை நினைத்து பாருங்கள் அனைத்தும் புரியும்.
கெஜர்வால் வாய் சவிடால், அலுவலகம் தாக்கப்பட்டால் என்னை கொன்று விடுங்கள் என்று சினிமா பன்ச் வசனங்களை பேசுவது எல்லாம் ஸ்டான்ட் செய்து தான் சாமானியர் என்று காட்டிக்கொள்ள முயலும் செயல்கள்.
ஆதாரம்
http://news.oneindia.in/new-delhi/kill-me-to-get-solution-for-kashmir-says-delhi-cm-arvind-kejriwal-1372676.html
இவரையும் இவரோடு சேரவிருக்கும் உதயகுமாரும் இந்தியாவின் எதிரிகளின் கைபாவைகள் என்று மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Comments
Post a Comment
Post ur comments and help us to improve