தோழனே நீ எங்கே ?????

( இந்திய பொருளாதாரம் தங்கத்தின் முதலீடு செய்வதால் ஏற்படும் விளைவு, இலங்கை பிரச்னையில் தமிழக மாணவர் போராட்டம் இரண்டையும் சேர்த்து என் நண்பனுக்கு நான் எழுதும் கடிதம் போல இந்த கட்டுரையை எழுதினேன் )

இலங்கை பிரச்சனைக்கு குரல் கொடுக்க என்னை அழைத்த தோழனே நீ எங்கே ?????

உன்னைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன் நீ எங்கே?

நீர்த்து போன தீர்மானத்துக்கு 1 மாதம் போராடிய என் தோழனே நீ எங்கே ???

இப்பொழுது இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது .மக்களோ தங்கத்தில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை பின்நோக்கி இழுக்கிறார்கள் .

அரசாங்கமோ செய்வது அறியாது நிற்கிறது 

உன்னை தேடியபொழுது டாலர் விலை 58.66 Rs . நீ கிடைக்கும் பொழுது அது 60 ஆக கூட ஆகிவிடும் ..

எங்கே இருக்கிறாய் நீ ??

கல்லூரி விடுமுறையில் காணாமல் போனாயோ ????????

என் அப்பாவிடம் தங்கத்தில் முதலிடு செய்யாதீர்கள்  என்றேன் என்னை முறைத்து ஏன்  என்று கேட்டார்கள் ?????

அரைமணிநேரம் எனக்கு தெரிந்த கதையை சொன்னேன் கதை கேட்பது போல் கேட்டவர்கள் மீண்டும் செய்தார்கள் தங்கத்தில் முதலீட்டை .............

அவர்களுக்கு அது புரியவில்லை இல்லை புரியவைக்க எனக்கு தெரியவில்லை அதற்குத்தான் உன்னை தேடுகிறேன் நீ எங்கே?

இலங்கை பிரச்சனை பற்றி எனக்கு 1 மணிநேரம் வகுப்பெடுத்த என் தோழனே என் இந்திய வீழும் பொழுது semseter holidayvil இருக்கிறாய் ???

ஒரு உண்மையை ஒப்புகொள்ளத்தான் வேண்டும் தங்கத்தையும் நாட்டையும் பற்றி பேசினால்  நாளிதழில் உன் படத்தை வெளியிடாது  .
டிவி இல் நீ வரமாட்டாய் இப்பொழுது டிவி சேனல்கள் தேர்தல் கூட்டணி கணக்குகளை கூட்டி கொண்டு இருக்கிறார்கள் எனவே நீயும் நானும் பொருளாதரத்தை பற்றி பேசினால் டிவி இல் வரமாட்டோம் .

யாருக்காகவோ நீ வந்தாய் போரட்டத்திற்கு ! உனக்காக நன் வந்தேன் போரட்டத்திற்கு !

மாநாடு முடிந்தது கூட்டம் கலைந்தது 

நீயும் நானும் முடித்துக்கொண்டோம் போராட்டத்தை 

அன்று இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த வித்தகனே இன்று உன் மக்களுக்கு விழிப்புணர்வு குடுக்க வரமாட்டாயா ?

ஒரு வேலை நமக்கே பொருளாதாரத்தை பற்றி தெரியாதே என்று யோசிக்கிறாய ?

எல்லாவற்றையும் முழுதாய் தெரிந்தா தமிழ்நாட்டில் போரட்டங்கள் நடத்துகிறோம் ?
நமக்கு அரைகுறையாய் தெரிந்ததை வைத்து ஆரம்பிப்போம் அடுத்த போராட்டத்தை !

உன்னை எதிர் பார்த்து !


----------------------------------------விக்கி 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)