என்னதான் இருக்கு இந்தியாவில் ?

கோகினூர் வைரம் நம்மலோடது தெரியுமா ? , வெள்ளக்காரங்க நம்கிட்ட இருந்து கப்பல் கப்பலா தங்கத்த அள்ளிட்டு போனாங்கலாம் என இந்தியாவின் பழைய செல்வ செழிப்பை பற்றி பலர் பெருமை பேசுவதை கேட்டிருப்போம்.

அப்படி என்னதான் இருந்தது இந்தியாவில் ? இந்திய அரசர்களிடம் இருந்த தங்கத்தையும், கோவில் நகைகளையும் பார்த்து மட்டுமா உலகம் இந்தியாவை செல்வா செழிப்பான நாடாக எடைபோட்டது ?

வெறும் அரசர்கள் வைத்திருந்த செல்வத்தை கொள்ளையடிக்கவா  வெள்ளைக்காரன் 200 வருடங்கள் இங்கேயே தங்கினான் ?

அப்படித்தான் இந்தியர்கள் நினைக்கிறார்கள் .

indian rupee

ஆனால் உலகத்தின் இந்தியா மீதான பார்வை வேறு. நம் வரலாற்று புத்தகங்கள் ஒன்றை  விளக்க தவறிவிட்டன இந்தியாவின் செல்வம் அதன் அரசர்களிடமும் கோவில்களிலும் கொட்டிக்கிடந்த தங்கம் அல்ல இந்திய மக்களின் உழைக்கும் குணம்.

இப்படி யோசித்து பாருங்கள்

கடந்த 10 வருடங்களில் மட்டும் எத்தனை ஊழல்கள் அரசாங்கத்துக்கு எத்தனை இலட்சம் கோடி இழப்புகள் எத்தனை கறுப்பு பண பதுக்கல்கள், இத்தனை இருந்தும் இந்திய பொருளாதாரம் தான்  இன்று  உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு பெட்டிகடையில் நடக்கும் பணபரிவர்தனை கூட அரசாங்கத்தின் கணக்கில் வந்துவிடும்.

அன்றாடம் நாம் பில் கொடுத்து சாமான் வாங்கும் கடைகள் இங்கே எத்தனை.? இதை முறைப்படுத்த படாத வியாபாரம் (Informal Economy)  என்று சொல்வார்கள். இந்த வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் வருமானம் நாட்டின் பொருளாதாரத்தில் கணக்கில் கொள்ளப்படுவது இல்லை. நமது கிராமங்களில் 80% , நகரங்களில் 73% பெரும் முறைப்படுத்த படாத வியாபாரத்தில் தான் ஈடுபடுகிறார்கள். அதாவது மீதி 20% பேரின் முறைபடுத்தப்பட்ட வியாபார கணக்கு தான் மொத்த GDP.

20% மட்டும் கணக்கில் கொண்டே உலகின் 7வது மிக பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது  பாக்கி 80 % கணக்கில் சேர்த்தால் ???

பிரிட்டிஷ்காரர்  செய்த சுரண்டல், 2002 ஆண்டு குஜராத் பூகம்பம்,
2004 ஆம் ஆண்டு சுனாமி, நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தவர்கள் கடந்து பத்து ஆண்டுகளில் செய்த சுரண்டல் என இந்தியாவின் வளங்கள் ஏதோ ஒரு விதத்தில் அழிக்க/ சுரண்டப்பட்ட  பொழுதும் இந்திய வளர்கிறது.

அரசுகள் அலட்சியமாக செயல்பட்டும், பஸ்சின் உதிரி பாகம் வாங்குவதில் கூட ஊழல் செய்து பேருந்துகளின் தரம் குறையும் வேறுவழி இன்றி 5 வருடத்தில் டிக்கெட்விலையை ஏற்றுவார்கள் யாரை நம்பி தெரியுமா ?

10 ரூபாய் விலைவாசி ஏறினால் கூடுதலாக ஒருமணி நேரம் உழைக்க தயாராக இருக்கும் நம்மை நம்பித்தான். கவனித்து பாருங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலில் குறிவைப்பது இயற்கை வளத்தை அல்ல மனித வளத்தை தான்.

indian worker

உலகில் எந்த நாட்டிலும் ஜாவா மொழி தெரிந்த என்ஜினீயரே இல்லையா என்ன ? ஏன் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மையே துரத்துகின்றன ? காரணம் ஜாவா யார்வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் கடுமையாக உழைப்பதற்கு இந்தியர்கள் தான் வேண்டும்.

வளர்ந்த நாடுகளில் மக்கள் எப்பொழுதும் ஆடம்பரமாக இருக்க விரும்புவார்கள். அதனால் தங்கள் வேலைகளை நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறார்கள் . அவர்களுக்கு பணம் பெருட்டல்ல வேலை முடிந்தால் போதும்.

அன்றைய இந்தியாவிற்கும் தற்போதைய இந்தியாவிற்கும் ஒரே வித்தியாசம் அன்றைய இந்தியா பொருட்களை உற்பத்திசெய்து ஏற்றுமதி செய்தது இன்றைய இந்தியா அடுத்தவர் கொடுக்கும் கூலிக்கு வேலையே செய்து கொடுக்கும் பணியாளரை உள்ளது.

மேக் இன் இந்தியா போன்ற இந்தியாவை உற்பத்தி கேந்திரமாகும் திட்டங்களே இந்தியாவை தொலைநோக்கு பார்வையில் வளரசெய்யும்.

அப்படி என்றால் இப்பொழுது நாம் வளரவில்லையா ?

பேருந்துகளில் கண்டக்டர் மீதி சில்லறை கொடுக்காவிட்டாலும் கண்டு கொள்ளாமல்  விடுவது கூட நாம் பொளாதார ரீதியாக வளர்கிறோம் என்பதன் சாட்சிகளே !

ஆனால் வளர்ந்த நாடுகள் தங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேரின. நாம் மனித வளத்தை சுரண்டி வளர்கிறோம்.  

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)