ஜல்லிக்கட்டும் எனது பதிவுகளும்

நான் இதை சொன்னால் சிலர் வருத்தப்படலாம் இல்லை கோவப்படலாம் இருந்தாலும் இதுதான் உண்மை !

இன்று பீட்டா விற்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடக்கின்றன போலீஸ் காரர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்.

இதுவே மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தி பாருங்கள் அன்று தெரியும் அரசியல் என்றால் என்ன அதிகார வர்க்கம் என்றால் என்ன ஊழலின் மோசமான முகம் எல்லாம் !

அன்று மாணவர் எழுச்சி எல்லாம் குண்டர்களை கொண்டு தூக்கி வீசப்படும் !

நீங்கள் இன்னும் ஊழலுடன் மோதிப் பார்க்கவில்லை ! சட்டத்தை கொண்டு போராடும் பீட்டா அமைப்போடு தான் மோதுகிறீர்கள்.. மறந்து விடவேண்டாம் ! அன்று இந்த மீடியா உங்களை ஆதரிக்காது ! அன்று OPS இறங்கி வரமாட்டார் !

அரசியல் அன்று புரியும் !

- ஜனவரி 20, 2016
                                                                                                         
 
Just now watched the interview of PETA India chief in CNN .
She is stating very clearly we are not making laws in India..its the Indian Government and TN government who made the law against Jallikattu and we just used the law in supreme court !
I guess she has a point ! Where is our mixer boys (Sry MPs)

- ஜனவரி 20, 2016 
                                                                                                         

ஜல்லிக்கட்டும் எனது பதிவுகளும்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் OPS சொல்வது சரி என்று தான் எனக்கு படுகிறது !

அவசர சட்டம் அடுத்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற கூட்ட தொடரில் தான் நிரந்தர சட்டமாக்கப்படும். சட்டசபையை தமிழக முதல்வர் கூட்டலாம் ஆனால் ஜல்லிக்கட்டை காரணம் காட்டி நாடாளுமன்றத்தை கூட்ட ஒத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை !

ஒன்று நன்றாக புரிகிறது மக்கள் அரசாங்கத்தை எந்த இடத்திலும் நம்ப தயாராக இல்லை (அவர்கள் சரியாக நடந்துகொள்ளும் பொழுதும் கூட)

- ஜனவரி 22, 2016
                                                                                                         

இந்தியாவில் எந்த சட்டமும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது தான் ! அது அவசர சாட்டமோ ! சாதாரண சாட்டமோ !

அதனால் நிரந்தர தீர்வு கிடைக்க வில்லை என்று சொல்வது தவறான வாதம்.

இன்று அவசர சட்டம் நாளை அதை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் ,பின்பு நாடாளுமன்றத்தில், உச்ச நீதிமன்றம் தலையிட்டால் வாதாடி வெல்ல வேண்டும் ! இதுதான் நடைமுறை சாத்தியம் !

நிரந்தர சட்டம் இயற்றினாலும் PCA திருத்தப்பட்டாலும் உச்ச நீதிமன்றம் அதை தடை செய்யலாம் மாற்றலாம்.

எனவே நிரந்தரம் நிரந்தரம் என்று நாம் சொல்வதில் அர்த்தம் இல்லை ! வரும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளதான் வேண்டும் ! இன்று கலைந்து செல்லத்தான் வேண்டும் !
 
- ஜனவரி 22, 2016
                                                                                                         

LTTE பிரபாகரன் தொடர் வெற்றிகளை குவித்த பொழுது ராஜிவ் காந்தி அவரை டெல்லிக்கு வரவழைத்து ஈழத்தை உலகநாடுகள் ஒத்துக்கொள்ளாது எனவே தமிழ்நாடு போன்ற தமிழ் மாநிலம் ஒன்று இலங்கையில் பெற்றுதருகிறேன் உன் போராட்டத்தை முடித்து கொள் என்றார்.. அன்றைக்கு இலங்கை அரசு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்ததால் அதற்கு சம்மதித்து. ஆனால் பிரபாகரன் அதை ஏற்கவில்லை
உடனே MGR வரவழைக்கப்பட்டார்.. MGR பேசிப்பார்த்தார்..இதுதான் உண்மை நிலவரம் இவ்வளவு தான் முடியும் என்று கெஞ்சிப்பார்த்தார்.. அப்பொழுதும் பிரபாகரன் இறங்கவில்லை !

காரணம் பிரபாகரன் பெற்ற தொடர் வெற்றிகள் ! இலங்கையில் அவரை எதிர்க்க ஆள் இல்லை என்ற நிலை இருக்கும் பொழுது ஏன் தான் இறங்கிவரவேண்டும் என்ற மனநிலையில் பிரபாகரன் இருந்தார்.

MGR மற்றும் ராஜிவ்வை புறந்தள்ளினார்.. MGR மரியாதையாக ஒதுங்கி கொண்டார் !

காலம் சுழன்றது ! பிரபாகரன் வெற்றி தொடர வில்லை !

ஒரு போராட்டத்தை நடந்தி அதற்கு அரசியல் தீர்வு என்று எதிராளி இறங்கி வந்தால் தன்னுடைய வெற்றிகளை பார்த்து தான் எதிராளி பயந்து இறங்கி வருகிறார் என்று அவரை ஏளனமாக புறந்தள்ளுவது அழகல்ல என்பதற்கு பிரபாகரன் சிறந்த உதாரணம் !

ஜல்லிக்கட்டு போராட்டதுக்கும் இது பொருந்தும் !

- ஜனவரி 22, 2016

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)