சிவன் சொத்தும் குளமும் நாசம் !

கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு போகுது ஜனம், சாமி சாமி ன்னு ! ஆனா அவன் கும்புடற சிலை கூட போலி சிலை ! இந்த பணவெறி புடிச்ச அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சாமியையும் விட்டுவைக்கல, கோவில் சொத்தையும் விட்டுவைக்கலை !

கோவில்ல விழா எடுத்தா முன்வரிசைல நின்னு பரிவட்டம் கட்டிக்க ஒரு பெரிய மனுஷன் கூட்டமே இருக்கு ஊருக்குள்ள, ஆனா அதே கோவில் சொத்து நாசமான போனா கேக்கத்தான் நாதி இல்லை.

பெருசு பெருசா வச்சுக்குறானுங்க கல்வெட்டு, என்னவோ கோவில் கட்டுன ராஜராஜன் சோழன் மாதிரி ! கோவிலுக்கு தந்தது என்னவோ ஒரு டப்பா பெயிண்ட் !

வெள்ளைக்குதிரை ஏறி வந்து 10 வது முறையா காப்பாத்துவாராம் ஒருத்தர் ! அவர் வர்றதுக்குள்ள குதிரை இனம்ன்னு ஒன்னு நாம விட்டுவச்சுருந்தா பாக்கலாம் ! எனக்கு என்னவோ மனுஷனும் பண வெறியும் மட்டும்தான் மிச்சம் இருக்கும்னு தோணுது ! !

#SupportPonManikavel


சரித்திரத்தில் முதல் முறையாக தமிழக அரசு தானாக முன்வந்து CBI வசம் வழக்குகளை ஒப்படைத்துள்ளது. அதுவும் ஒரு வழக்கல்ல இரண்டு வழக்கல்ல சிலை கடத்தல் பிரிவு போட்ட அத்தனை வழக்கையும் ஒரேடியாக CBI விசாரிக்கவேண்டும் என்று கோரியுள்ளது தமிழக அரசு ! 

இத்தனைக்கும் வழக்கை தற்பொழுது விசாரித்து வரும் பொன் மாணிக்கவேல் பணிஓய்வு பெற இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. ஆனால் இரண்டு மாதம் இந்த மனிதரை விட்டுவைத்தால் இன்னும் எதையாவது கண்டுபிடித்து தொலைத்து விடுவாரோ என்கிற பயத்தில் வழக்குகள் அனைத்தும் CBI வசம் மாற்றி தரப்பட்டுள்ளது !

ஆம் இங்கே சாமிக்கும் பாதுகாப்பு இல்லை !

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

உலக தண்ணீர் தினம் : திருவாரூர் கமலாலய குளம்

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்