Decathlon கடையில் ஏன் Puma, Adidas ஷூக்கள் கிடைப்பதில்லை ?

#Decathlon கடைக்கு செல்லும் பலரும் அடிக்கடி கூறும் ஒரு குறை அங்கே Decathlon னின் சொந்த தயாரிப்பு/பிராண்ட் பொருட்கள் மட்டுமே கிடைக்கிறது. வேறு பிராண்ட் பொருட்களை அவர்கள் விற்பதில்லை என்பது

இதன் காரணத்தை விளக்க இந்த சின்ன பதிவு !

Decathlon ஒரு பிரெஞ்சு நிறுவனம். இந்தியாவில் கடை திறக்கும் எந்த ஒரு அந்நிய நிறுவனமும் Multi Brand Retail எனப்படும் பல பிராண்ட் பொருள்களை விற்கும் கடையை திறக்க அனுமதி இல்லை

Decathlon Chennai


வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை விற்பனை கடை திறந்து இங்கே இருக்கும் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகளின் வியாபாரத்தை பாதிக்காமல் இருக்க இப்படி ஒரு சட்டம் அமலில் உள்ளது.

ஆனால் சட்டம் கொண்டுவரும் பொழுது வால்மார்ட் கடை திறக்க கூடாது என்று கொண்டுவர முடியாதே. எனவே இந்த சட்டம் எல்லா அந்நிய நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த சட்டப்படி அந்நிய நாட்டு நிறுவனம் இந்தியாவில் மொத்த வியாபாரம் செய்யலாம் (Whole sale) அல்லது தங்களின் பிராண்ட் பொருட்களை மட்டும் கடை வைத்து (Single Brand Retail) விற்பனை செய்யலாம்

இதே விதி Van Heusen, Puma, Adidas, Jockey, Rolex, IKEA, Dominos, Samsung போன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும்..

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்