இஸ்ரோவும் 104 செயற்கைகோளும்

இஸ்ரோ ஒரே செலுத்துதலில் (launch) 104 செயற்கைகோள்களை பிப்ரவரி 15 அன்று செலுத்த உள்ளது. இதற்கு முன் ரஷ்யா 37 செயற்கைகோள்களை ஒரே launch ல் செலுத்தியது தான் உலகசாதனையாக உள்ளது.

ரிஸ்க் நிறைந்த இந்த திட்டத்தை இஸ்ரோ கையில் எடுக்க காரணம் இல்லாமல் இல்லை.

இன்று உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழிலுக்கு பயன்படும் செயற்கைகோள்களை தயாரித்து விண்ணில்செலுத்துவது அதிகரித்துள்ளது. செயற்கோள்களை நிறுவனங்களே தயாரித்துகொண்டாலும் அதை விண்ணில் செலுத்த ராக்கெட் அவர்களிடம் இல்லை.

அதிலும்  ராக்கெட் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது எனவே நிறுவனங்கள் ராக்கெட் ஏவுதலில் சிறந்து விளங்கும் மற்ற நிறுவனங்களிடம் பணம் செலுத்தி தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் புதிய தொழில் வாய்ப்பு உலகம்முழுவதும் பெருகிவருகிறது.

இதில் நிறுவனங்களுக்கு இரண்டே எதிர்பார்ப்பு தான் குறைந்த செலவு மற்றும் வெற்றிக்கான சாத்தியம் அதிகம் உள்ள ராக்கெட்.

இஸ்ரோ இது இரண்டிலுமே கில்லாடி !

இஸ்ரோவும் 104 செயற்கைகோளும்

இஸ்ரோவின் PSLV ராக்கெட் விராட் கோஹ்லி போன்று வெற்றி நாயகன் என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இதுவரை 36 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ள PSLV ராக்கெட் தன் முதல் பயணத்தை தவிர மற்ற 35 முறையும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. அதே சமயம் உலகத்திலேயே குறைந்த விலையில் ராக்கெட்டை அனுப்புவதும் இஸ்ரோதான்.

பிப்ரவரி 15 ஆம் தேதி செலுத்துதல் வெற்றிபெரும் பட்சத்தில் கோடிகள் புரளும் விண்வெளி பிசினஸில் இந்தியா ராஜாவாக மாறிவிடும் !

இந்திய தகவல் தொழில் நுட்பதுறை எப்படி Y2K பிரச்னையை சிக்கென பிடித்துக்கொண்டு முன்னேறினவோ, அதே போல் இஸ்ரோ தொழில்ரீதியில் வெற்றிபெறப்போகும் தருணம் இது !

மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில் இஸ்ரோவிற்கு 23% சதவீத கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மற்றுமொரு நல்ல செய்தி ! 

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்