பட்ஜெட் 2017 - சத்தம்போடாமல் சர்க்கரை மானியம் ரத்து
அருண் ஜெட்லி பட்ஜெட்டில் சத்தம்போடாமல் சர்க்கரை மானியத்தை ரத்து செய்யும் மோசமான திட்டத்தை அறிவித்துள்ளார் !
குடிசைவாசி முதல் மாளிகைவாசி வரை அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையை (sugar) விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.
ஆனால் அதே சர்க்கரை ரேஷன் கடையில் 13 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ! மத்திய அரசு ஒவ்வொரு கிலோ சர்க்கரைக்கும் 17 ரூபாயை மானியமாக தருகிறது ! இதன் மூலம் மத்திய அரசுக்கு வருடம் 4200 கோடி செலவாகிறது.
இந்த பட்ஜெட்டில் அந்த மானியத்தை ரத்து செய்துள்ளார் அருண் ஜெட்லி !

எனவே வரும் நிதி ஆண்டில் ஒன்று ரேஷன் கடையில் மக்கள் 30 ரூபாய் கொடுத்து சர்க்கரையை வாங்கிக்கொள்ளவேண்டும் அல்லது மத்திய அரசுக்கு பதிலாக மாநில அரசுகள் அந்த 17 ரூபாய் மானிய செலவை ஏற்கவேண்டும் !
மக்கள் மத்திய, மாநில அரசு என்றெல்லாம் பிரித்து பார்க்கமாட்டார்கள் ! அவர்களை பொறுத்தவரை ரேஷன் கடை என்பது மாநில அரசின் கடை ! அங்கு சர்க்கரை 13 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாய்க்கு விற்கப்பட்டால் கண்டிப்பாக மக்கள் அதை ஏற்கமாட்டார்கள்.
இதை எதிர்கொள்ள மாநில அரசுகள் வேறு வழியில்லாமல் தங்கள் நிதியில் இருந்து சர்க்கரை மானியத்தை கொடுத்து தான் ஆகவேண்டும் ! ஏற்கனவே நிதிச்சுமையில் தள்ளாடும் மாநில அரசுகளுக்கு மேலும் ஒரு நிதி சுமையை ஏற்றி முதுகில் குத்தியுள்ளார் அருண் ஜெட்லி !

Comments
Post a Comment
Post ur comments and help us to improve