அதிமுக நல்லவர்கள் அல்ல திமுக சளைத்தவர்களும் அல்ல

திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நேற்று நடந்த ஒரு சட்டசபை நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு சொல்பவர்கள் சிந்திப்பீர் !

திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் கையில் எடுக்கும் முதல் அஸ்திரம் ரியல் எஸ்டேட் துறையை முடுக்கி விடுவதுதான்.

மணல் கொள்ளையில் அதிமுக கில்லாடி என்றால் ரியல் எஸ்டேட் கொள்ளையின் ஜாம்பவான் திமுக !

DMK 2g

இன்று நடுத்தர வர்கம் வீடு என்ன, நிலம் கூட வாங்க முடியாத அளவுக்கு மனையின் விலையை ஏற்றிய பெருமை திமுகவை சாரும் ! (அன்று நிலம் வாங்கிய எவரும் விற்க முடியாத இன்றைய நிலைக்கு ஜெயலலிதா பத்திர பதிவு விலையை ஏற்றியது ஒரு காரணம்).

ஒரு சின்ன உதாரணம்

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் (2009 ஆம் ஆண்டு) எங்கே கட்டப்படப்போகிறது என்பதை கடைசிநிமிடம் வரை அறிவிக்காமல், இங்கே வரும் அங்கே வரும் என லோக்கல் திமுக காரர்கள் 24 * 7 லோக்கல் தொலைக்காட்சியில் காந்தியில் தொடங்கி ஐஸ்வர்யா ராய் நகர் வரை விதவிதமான நகரை உருவாக்கி திருவாரூரை சுற்றி 10 கிமீ ஒரு விவசாய நிலம்கூட இல்லாமால் அழித்த கதை ஊரறிந்தது.

பின்னர் வெள்ளை வேட்டி, Bolero கார் என ஊரை சுற்றும் இவர்கள் என்ன உழைத்தா சம்பாதித்தார்கள் ?

சசிகலாவை நாம் எத்தனை பலமாக எதிர்கிறோமோ அதைபோல் எதிர்க்கப்படவேண்டிய அமைப்பு திமுக !

சட்டசபையில் அராஜகம் பின் காந்தி சிலை முன் உண்ணாவிரதம் (பாவம் காந்தி), மயிலாப்பூர் மண்டபத்தில் அரைமணிநேரம் தங்கவைப்பதன் பெயர் கைது என்ற மொக்கை அரசியல் விளையாட்டுகளை கண்டு நாம் ஏமாந்தால் நாம் தான் முட்டாள் !

அதிமுக நல்லவர்கள் அல்ல திமுக சளைத்தவர்களும் அல்ல. எந்த டிவி பரபரப்பையும் பார்த்து நாம் ஏமாறக்கூடாது !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)