ஐநாவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா !!
செய்தி:
வரலாற்றில் பெரிய திருப்பமாக பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் முன்மொழிந்த ஐநா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது...
விளக்கம்:
ஹமாஸ் இயக்கத்தின் ஆதரவு கொண்ட ஷஹீத் (Shahed) என்கிற அமைப்பு ஐநாவில் பார்வையாளராக செயல்படுவதற்கு எதிராக இஸ்ரேல் ஐநாவில் தீர்மானம் கொண்டுவந்தது.
இந்த தீர்மானம் 28-14 என்கிற ஆதரவு-எதிர்ப்பு ஓட்டுக்களுடன் நிறைவேறியது. இதில் கவனிக்கதக்க செய்தி இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததே
இந்தியாவிற்கு உலக அரங்கில் உதவி தேவைப்பட்டால் முதலில் ஓடிவரும் நாடுகள் என்றால் பிரான்சும், இஸ்ரேலும் தான்
கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய லேசர் குண்டுகள் துவங்கி, விவசாயத்தில் சொட்டு நீர் பாசனம் என பலதுறைகளில் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவி செய்கிறது.
ஆனால் நேரு காலம் துவங்கி பல பத்தாண்டுகளாக இஸ்ரேலுக்கு எதிராகவே இந்தியா ஐநாவில் செயல்பட்டு வந்திருக்கிறது.
இதற்கு காரணம் மிக எளிதானது
உலக அரங்கில் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை முஸ்லிம் நாடுகள்/மக்களிடம் அதிகம் உள்ளது. அதற்கு பல வரலாற்று காரணங்கள் உண்டு
எனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா எடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு தர்மசங்கடத்தை தரும் என்பதால் இஸ்ரேலுடன் நெருங்கி நட்பு பாராட்டினாலும் ஐநா ஓட்டெடுப்பு என்று வந்துவிட்டால் இஸ்ரேலுக்கு எதிராகவே (பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக) இந்தியா ஓட்டு அளித்து வந்திருக்கிறது
இந்த நிலைப்பாடு மாறவேண்டும் என்றும், நமக்கு ஒன்றென்றால் முதலில் உதவும் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கவேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாக இந்தியாவில் ஒலிக்க, தற்பொழுது தான் இந்தியா தனது நிலைப்பாட்டை மெதுவாக மாற்றிவருகிறது..
இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு வாஜ்பாய் காலத்தில் (குறிப்பாக கார்கில் போருக்கு பின்) உருவாக துவங்கியது. தற்போதைய காலகட்டத்தில் உச்சத்தில் உள்ளது..
இது நல்ல மாற்றம் என்றே நான் நினைக்கிறேன். இஸ்ரேல் இந்தியாவிற்கு என்றும் நண்பன் போலத்தான் நடந்துவந்திருக்கிறது...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve