நிறுவனங்கள் Form 16 வழங்க கடைசி தேதி நீட்டிப்பு
செய்தி :
நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு Form 16 வழங்க கடைசி தேதியை 10 ஜூலை வரை நீடித்து வருமான வரித்துறை உத்தரவு...
விளக்கம் :
பொதுவாக நிறுவனங்கள் Form 16 படிவத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி. அதன் பின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஊழியர் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
இந்தமுறை Form 16 படிவத்தின் வடிவத்தை வருமான வரித்துறை சமீபத்தில் மாற்றியமைத்தது. எனவே புதிய வடிவத்தில் Form 16 தயாரித்து வழங்க நிறுவனங்களுக்கு 25 நாட்கள் (ஜூன் 15ல் இருந்து ஜூலை 10க்கு) காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது..
இந்த அறிவிப்பால் நமக்கு என்ன பிரச்சனை ?
பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31. ஜூன் 15 க்குள் Form 16 வழங்கப்பட்டுவிடும் என்பதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய 45 நாள் அவகாசம் இருக்கும். இந்த முறை ஜூலை 10 வரை Form 16 வழங்க காலக்கேடு நீடிக்கப்பட்டுள்ளதால் நமக்கு வருமான வரி தாக்கல் செய்ய வெறும் 20 நாள் காலக்கெடுவே மிச்சமிருக்கும். எனவே ஆடிட்டர்கள்/மற்றும் நேரடியாக வரி செலுத்துபவர்கள் பாடு கஷ்டம். எனினும் வருமான வரித்துறை கணக்கு தாக்களுக்கான காலக்கெடுவையும் நீடித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Form 16 என்றால் என்ன ?
படிவம் 16 என்பது மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அவர்களின் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு சான்றிதழ் ஆகும். இதில் நிறுவனம் ஊழியரிடம் பிடித்த வருமான வரி தொகை மற்றும் நிறுவனம் ஊழியருக்கு வழங்கிய சம்பளம் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்..
Comments
Post a Comment
Post ur comments and help us to improve