புரியாத புதிர் : இந்திய பொருளாதார கொள்கை
புரியாத புதிர் : இந்திய பொருளாதார கொள்கை
இந்திய மக்கள் தங்கத்தில் செய்த முதலீடு 55 மில்லியன் அமெரிக்க $ என்கிறது கணக்கு .தங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை.
அப்படியென்றால் ஒவ்வொரு இந்தியனும் வெளிநாட்டில் (தங்கம் என்ற போர்வையில் ) முதலீடு செய்கிறான் .
நீங்கள் நினைக்கலாம் நாம் ரூபாயை வைத்துதானே தங்கம் வாங்குகிறோம் என்று. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் தங்கம் டாலர் கொடுத்துத்தான் வாங்கப்படுகிறது உற்பத்தி செய்யப்படவில்லை.
இந்திய பொருளாதாரத்தை விழ்ச்சியில் இருந்து காப்பாற்ற 20 மில்லியன் $ முதலீட்டை எதிர்பார்பதாக நிதி அமைச்சர் கூறுகிறார்.
எளிமையாக சொன்னால் இந்திய மக்கள் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை அவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள் ஆனால் இந்திய அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்கிறது.
இந்திய மக்களே இந்திய பொருளாதரத்தை நம்பி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பாத பொழுது யாரோ ஒரு வெளிநாட்டுகாரன் வந்து இந்தியாவில் முதலீடு செய்து இந்திய பொருளாதரத்தை காப்பாற்றுவான் என அரசாங்கம் நினைப்பது புரியாத புதிரே ....................
Comments
Post a Comment
Post ur comments and help us to improve