பணம் தின்னி கழுகுகள்
தமிழக தலைநகரத்தின் விடியல் வெடி சத்தத்துடன் துவங்கியது . காலை 7.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக கவுஹாத்தி செல்லும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததை செய்தி சேனல் வழியாக நாம் பார்த்தோம் . இந்த செய்தியை சேனல்கள் காட்டிய விதத்திலேயே அவர்களின் வியாபார உத்திகளையும் கீழ்த்தரமான குணத்தையும் உணர முடிந்தது . சுவாதி என்ற பெண் ஒருவர் இறந்ததாக மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு செய்தி சேனல் முதலில் 50 பேர் பலி எனவும் பின்னர் 15 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது எனவும் சக பயணிகளையும் சாக பயணிகளின் குடும்பத்தாரையும் பதைபதைக்க வைத்து அரசியல் லாபம் தேடுகிறது . சாகாத பலரை சாகடித்தது அரசியில் லாபம் தேடுவது தான் சமூக சிந்தனையா ? மற்றொரு தனியார் டிவி ஒருபடி மேலே சென்று சென்னை சென்ட்ரல் வெடிகுண்டு விபத்து Exclusive உங்கள் ***** டிவியில் மட்டும் என்று எதோ சினிமா பட விளம்பரம் போல குண்டுவெடிப்பின் கோரத்தை பணமாக்கி கொண்டு'இருக்கிறது . ஒருவேளை வெடிகுண்டு வெடித்தால் தீவிரவாதிகளை விட அதிகம் சாந்தோஷப்படுவது ந