கோஷம் ஆரம்பம் !
கடந்த ஆண்டு பீகார் மாநில தேர்தலுக்கு முன்னால் மிகச்சரியாக எழுப்பப்பட்ட நாட்டில் சகிப்புதன்மை குறைந்து விட்டது என்ற மீடியாக்களின் கோஷம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல எழுத்தாளார்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி வழங்கி சகிப்புத்தன்மையின்மை கோஷத்துக்கு உரமூட்டினர். பீகார் தேர்தலுக்கு பிறகு இந்தியா மீண்டும் தான் இழந்த சகிப்பு தன்மையை மீட்டுவிட்டதாக மீடியாக்கள் முடிவு செய்துவிட்டனர் போலும், அதன் பின் எந்த மீடியாவும் அதைப்பற்றி பேசவில்லை, எழுத்தாளர்களின் விருதுகளும் பத்திரமாக அவரவர் வீடுகளில் உறங்குகின்றன. இந்த ஆண்டு அஸ்ஸாம், தமிழகம், கேரளா என பல மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன. அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரச்சாரமும் தொடங்கிவிட்ட நிலையில் இப்பொழுது ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் தற்கொலைக்கு தலித் சாயம் பூசி அடுத்த பிரச்சனையை எதிர்கட்சிகளும் மீடியாக்களும் தொடங்கிவிட்டன. நன்றாக கவனித்து பாருங்கள், எல்லா செய்தி ஊடகமும் இறந்த மாணவரை தலித் அடையாளமாக மாற்ற மிகவும் முனைந்துள்ளதும், ஹைதராபாத் பல்கலைகழகம் அமைந்துள்ள தெலுங்கானா மாநில அரசை பற்றி கண்டுக...