படித்ததில் பிடித்தது - 1 (எழுத்தாளர் கல்கி பற்றிய குறிப்புக்கள்)
கல்கி தன்னுடைய சொந்த பெயரில் பத்திரிகையைத் தொடங்கிய நேரம் அதன் நிர்வாக தலைவர் சதாசிவத்திற்கு பெரிய கவலை காரணம் காகிதத் தட்டுப்பாடு. இதை பற்றி கேள்விப்பட்ட கல்கி கிண்டலாக சிரித்தார், "கவலைபடாதிங்க, நான் ஒரு தமிழ்நாட்டுச் சரிந்திர நாவல் எழுதப்போகிறேன். அதை அதிகம் பேர் படிக்கமாட்டாங்க. நமக்கு காகிதம் நிறையத் தேவைபடாது" என்று வேடிக்கையாக சொன்னார். 1941 ல் தொடங்கிய அந்த சரித்திர நாவல் தான் 'பார்த்திபன் கனவு'. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தான் எழுத தொடங்கினார் கல்கி ஆனால் அவரது எழுத்து லாவகம் கல்கி விற்பனையை கிடுகிடுவென உயர்த்தியது. பார்த்திபன் கனவு தந்த வெற்றி உற்சாகத்தில் கல்கி 1944ல் அடுத்த எழுதிய நாவல் "சிவகாமியின் சபதம்". ஆறு வருடம் கழித்து "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி எழுதத் தொடங்கினார். தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் வெளிவந்து 60+வருடங்கள் ஆகியும் இன்று வரை புத்தக விற்பனையில் முன்னணியில் உள்ளது. கல்கி - என். சொக்கன், புக் மார்க்ஸ் புத்தகத்திலிருந்து...