தீபாவளி கசக்கிறது !
இன்று தீபாவளி என்று சன் டிவி சிறப்பு நிகழ்ச்சி பார்த்தால்தான் தெரியும் போல ! ஊரு அவளோ அமைதியா இருக்கு ! விவசாயம் பொய்தது, மழையை காணும், பேண்ட் சட்டை எடுக்க குறைந்தது 1500 ரூபாய் வேண்டும், வெடி, இனிப்புகளின் விலை 200 ஐ கடந்து விட்டது.. எவர் வீட்டு போர் குழாயிலும் தண்ணீர் இல்லை... அரசாங்கம் 5000 செலவில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்ட சொன்னபொழுது 4 செங்களை நட்டு வைத்து அரசாங்கத்தை ஏமாற்றிய நாம் இன்று 40000 முதல் 100000 வரை செலவு செய்து போர் குழாய் ஆழத்தை அதிகப்படுத்துகிறோம்.. வறட்சி அதன் கோரா முகத்தை காட்ட தொடங்கி விட்டது.. இதுதான் திருவாரூரின் இன்றைய நிலை... குடிநீர் லாரிகளை இதுவரை பார்க்காத திருவாரூர் மக்கள் வெகு விரைவில் குடிநீர் லாரிக்கு பின்னால் ஓடப்போகிறார்கள்.. விழித்துக்கொண்டோர் பிழைத்து கொண்டார்.. திருவாரூர் மக்களே நாம் எப்போது விழிக்கப் போகிறோம்.. ? செலவோடு செலவாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவீர் ! வரும் டிசம்பர் மாத மழை உங்களை போர் குழாய் ஆழப் படுத்தும் செலவில் இருந்து காக்கட்டும்... பெற்றோரிடம் எதை எதையோ அடம் பிடித்து வாங்கும் நாம் மழை நீர் சேமிப்பு தொட