பட்ஜெட் 2018 : என் கருத்து
Source : Google image search * பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price - MSP) விட 1.5 மடங்கு அதிகம் விலை தரவேண்டும் என்பதே. இந்த அறிவுரையை மோடி இந்த முறை செயல்படுத்தியுள்ளார். இனி விவசாய பொருட்கள் MSP விலையை விட 1.5 மடங்கு அதிக விலைகொடுத்து அரசாங்கம் கொள்முதல் செய்யும். மேலே சொன்ன அறிவிப்பு விவசாயிகளுக்கு நல்ல விலை ஈட்ட உதவி செய்யும். அதே போல் விவசாய பதப்படுத்துதல் மற்றும் குளிர் சாதன வசதிக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Sea food ஏற்றுமதிக்கு 10000 கோடி ஒதுக்கீடு வரவேற்கப்படவேண்டிய அம்சம். விவசாய கடன் தள்ளுபடி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது நல்லவிஷயம். * பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. (குறையும் என்ற நடுத்தர மக்களின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம்) * 10 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் இன்