Posts

Showing posts from January, 2020

மலேசிய பாமாயில் வாங்க தடை ! காஷ்மீர் கருத்துக்கு இந்தியா பதிலடி

பாமாயில் உற்பத்தியில் உலகளவில் முதலிடம் இந்தோனேசியா தான். ஆனால் நாம் மலேசியாவிடம் இருந்து தான் பாமாயில் இறக்குமதி செய்கிறோம். அதற்கு இந்திய அரசு வரிச்சலுகையும் தந்துவருகிறது. ஆனால் மலேசிய பிரதமர் சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது என்றார். CAA மூலம் முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதாக அறிக்கை விட்டு இந்திய அரசை கடுப்பேத்தினார்.. பொறுத்து பார்த்த இந்திய அரசு பதிலடி கொடுக்க முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்திக்கொள்ள சொன்னது. அதற்கு பதிலாக இந்தோனேசியாவிடம் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.. இது மலேசிய அரசுக்கு பெரிய அடியாக இருக்கும். காரணம் பாமாயில் ஏற்றுமதி மலேசிய GDP யில் கிட்டத்தட்ட 3% பங்கு வகிக்கிறது..

செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ??

Image
செய்தித்தாள்களில் வரும் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்திருக்கிறீர்களா ?? அவை எங்கே சாலை பணிகள் நடக்கவிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு வழியாகும். உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக தினத்தந்தி மற்றும் தினமலர் நாளிதழில் வெளியான நெடுஞ்சாலைத்துறையின் விளம்பரங்கள் மூலம் நாம் அறிந்திடும் செய்தி : சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்தின் கீழ் கும்பகோணம் - மன்னார்குடி (ஆலங்குடி வழி) மற்றும் கும்பகோணம் - சீர்காழி சாலைகளை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன என்பதே.. நில கையகப் பணிகள் முடிந்தால் அடுத்து டெண்டர் விடப்பட்டு சாலை போடும் பணிகள் துவங்கும்.. இனி செய்தித்தாளில் நெடுஞ்சாலை துறை விளம்பரங்களை கவனித்தால் படித்துவிடுங்கள்..

தமிழக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே

Image
தமிழகத்தில் மிச்சமிருந்த பல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே. இந்த பணிகள் முடிக்க 900 நாட்கள் (தோராயமாக ஜூன் 2022) காலக்கெடுவாக வழங்கப்பட்டுள்ளது. டெண்டர் வழங்கப்பட்டுள்ள பாதைகள் : மதுரை - மானாமதுரை, சேலம் - விருத்தாசலம் - கடலூர் துறைமுகம், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர்.. L & T நிறுவனம் பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதிலும் பெயர் போன நிறுவனம். அவர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டது ஒரு வகையில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 2022 க்குள் தமிழகத்தின் ரயில் பாதைகள் மொத்தமும் மின்மயமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்... படம் : Tamilnadu Train Users 🚆 தமிழ்நாடு ரயில் பயனர்கள் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது