தமிழக ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே
தமிழகத்தில் மிச்சமிருந்த பல ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளை L & T நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது தென்னக ரயில்வே.
இந்த பணிகள் முடிக்க 900 நாட்கள் (தோராயமாக ஜூன் 2022) காலக்கெடுவாக வழங்கப்பட்டுள்ளது.
டெண்டர் வழங்கப்பட்டுள்ள பாதைகள் :
மதுரை - மானாமதுரை, சேலம் - விருத்தாசலம் - கடலூர் துறைமுகம், திண்டுக்கல் - பாலக்காடு, பொள்ளாச்சி - போத்தனூர், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்தூர், விருதுநகர் - தென்காசி, திருச்சி - மானாமதுரை - விருதுநகர்..
L & T நிறுவனம் பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதிலும் பெயர் போன நிறுவனம். அவர்களிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டது ஒரு வகையில் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும்.
2022 க்குள் தமிழகத்தின் ரயில் பாதைகள் மொத்தமும் மின்மயமாக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கலாம்...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve