இந்தியர்களின் சேமிப்பு பழக்கம்
இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் ஓர் அலசல் : 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார சரிவால் பலநாடுகள் தத்தளித்தன. ஆனால் வளரும் நாடான இந்தியாவில் ஒரு சில துறைகளை( IT INDUSTRIES, EXPORTS ) தவிர வேறு துறையிலும் பெரிய தாக்கம் இல்லை . இது பல வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களின் புருவங்களை உயர்தியது .அப்பொழுது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவின் பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை விவரித்தது. இந்த ஆய்வின் முடிவுகள் பல வெளிநாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்கவைத்தன. அந்த தகவல்கள் இதோ ...... இந்திய மக்கள் பெரும்பாலும் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள் .இந்திய மக்கள் வங்கிகளில் வருடாவருடம் சேமிக்கும் பணம் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் பிரமாண்டமான தொகையாக உள்ளது . இந்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பெரும்பாலும் துண்டுவிலும் பட்ஜெட்டாகவே உள்ளது.வளரும் ஒரு நாட்டில் இது தவிர்க்க முடியாததே. (துண்டுவிலும் பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் வரவுக்கு (வரி வசூல் ) அதிகமாக செலவு செய்வதேயகும் ) ஆய்வ...