இந்தியர்களின் சேமிப்பு பழக்கம்
இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் ஓர் அலசல் :
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார சரிவால் பலநாடுகள் தத்தளித்தன. ஆனால் வளரும் நாடான இந்தியாவில் ஒரு சில துறைகளை( IT INDUSTRIES, EXPORTS ) தவிர வேறு துறையிலும் பெரிய தாக்கம் இல்லை .
இது பல வெளிநாட்டு பொருளாதார நிபுணர்களின் புருவங்களை உயர்தியது .அப்பொழுது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்தியாவின் பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளை விவரித்தது.
இந்த ஆய்வின் முடிவுகள் பல வெளிநாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்கவைத்தன.
அந்த தகவல்கள் இதோ ......
இந்திய மக்கள் பெரும்பாலும் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள் .இந்திய மக்கள் வங்கிகளில் வருடாவருடம் சேமிக்கும் பணம் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் பிரமாண்டமான தொகையாக உள்ளது .
இந்திய அரசாங்கத்தின் பட்ஜெட் பெரும்பாலும் துண்டுவிலும் பட்ஜெட்டாகவே உள்ளது.வளரும் ஒரு நாட்டில் இது தவிர்க்க முடியாததே.
(துண்டுவிலும் பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் வரவுக்கு (வரி வசூல் ) அதிகமாக செலவு செய்வதேயகும் )
ஆய்வின் முடிவு படி இந்தியா அரசாங்கத்தின் செலவுகளுக்கு அரசு வங்கிகளிடம் பணம் பெறுகிறது.
வங்கிகள் கொடுக்கும் பணம் வேறு யாருடையதும் அல்ல நாம் வருடாவருடம் சேமிக்கும் லட்சம் கோடிகளில் இருந்துதான் அந்த பணம் அரசுக்கு கடனாக தரப்படுகிறது .
எளிமையாக சொன்னால் இந்திய அரசாங்கம் இந்திய மக்களின் சேமிப்பில் தான் காலம் தள்ளுகிறது .
சேமிக்கும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருப்பது கண்டு அவர்கள் ஆச்சர்யபட்டதில் வியப்பில்லை .
எனவே தான் ப .சிதம்பரம் கூட இந்திய மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல் வங்கிகளில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறார் .
எனவே நாம் வங்கிகளில் சேமிக்கும் பணம் நாட்டிற்கு செய்யும் சேவையாகும்.
இதை படித்த பிறகு உங்களுக்கு இரு கேள்விகள் எழலாம்
1.) மொத்த சேமிப்பை கொண்டு அரசை நடத்திவிடலாம் என்றால் எதற்காக அந்நிய முதலீடு ????
2.)தங்கத்தில் சேமிப்பது தவறா ????
இந்த இரு கேள்விகளுக்கும் அடுத்த பதிவில் பதில் அளிக்கிறேன் .
Comments
Post a Comment
Post ur comments and help us to improve