மூன்றாவது கோணம் - ஸ்டாம்ப் பேட் சொல்லும் உண்மை
நான்கு வருடம் கழித்து பள்ளி செல்லும் வாய்ப்பு . சுதந்திர இந்தியாவின் ஜனநாயக திருவிழாவில் என்னுடைய பங்களிப்பை செய்ய திருவாரூர் அரசு தொடக்க பள்ளிக்கு சென்றிருந்தேன். நேர்முகத் தேர்விற்கு செல்வது போல் சொல்லமுடியாத பதட்டம் என்னை தொற்றிகொண்டது. இத்தனைக்கும் திருவாரூர் வாக்குசாவடி பதட்டமான வாக்குசாவடி பட்டியலில் கூட இல்லை ஆனால் எனக்கு ஏனோ பதட்டத்தை தவிர்க்க முடியவில்லை. கூட்டம் கொஞ்சம் இருந்தது . எனது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் நீட்டினேன். எனது பெயரை சரி பார்த்த பின்னர் கையெழுத்திட சொன்னார்கள். கையெழுத்து போடும் பொழுதுதான் கவனித்தேன் பக்கத்தில் இருந்த ஸ்டாம்ப் பேடை . கையெழுத்து போடா தெரியாதவர்கள் கைநாட்டு வைப்பதற்கு . சுதந்திரம் கிடைத்து 67 வருடம் முடிந்த பின்னும் எல்லா இந்தியர்களுக்கும் கல்வியை நம்மால் வழங்க முடியவில்லை. வளர்ச்சி எல்லா தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதன் சாட்சியாக ஸ்டாம்ப் பேட் தெரிந்தது. - விக்கி