Posts

Showing posts from October, 2014

Temporary Smile 3.37 Price cut

Image
Today Modi's government announced one of its biggest reforms by deregulating Diesel price. (Earlier in UPA Government Petrol prices were deregulated) Why Diesel matters much? In India, the fuels like Diesel, Kerosene, Domestic gas prices are controlled by Government. So Government only fix the prices. Market price may be high or low, but Government will fix the price of Diesel. UPA government had decided to raise diesel price in small dose until it align with market price. With continuation to that Diesel price are raised 50 paise every month & in past 19 months Diesel price are raised by   Rs. 11.81 per liter. Now market price of crude oil nearly falls under $80 due to global situations. but keep in mind its not permanent. We can't or even US can't predict the oil price. It will be in fluctuation through out the year.   As of now the price is below 80 $. but you cant expect the same through out the year. Lets take an small example to explain...

இந்திய கிரிக்கெட் அணி தேசிய அணியா ?

Image
சரிதா தேவி , இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் நடுவரின் தவறால் அரையிறுதியில்  வெளியேற்றப்பட்டு வெண்கலம் வென்றார். பதக்க விழாவில் அவர் கதறி அழுது பதக்கத்தை வாங்கமறுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்திய போன்ற ஒரு நாட்டில் பிறந்து பல கட்ட ஊழல்கள், சிபாரிசுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தலையீட்டை எல்லாம் போராடி வென்று ஆசியா கோப்பை போன்ற ஒரு போட்டிக்கு செல்வதே பெரிய உலக சாதனையாகும். அப்படி போராடி கலந்து கொண்ட போட்டியில்  நடுவரின் அநீதியால் பதக்கத்தை பறிகொடுத்து, தங்கத்துக்கு பதிலாக வெண்கல பதக்கம் தரப்பட்ட பொழுது சரிதா தேவியின் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை நினைப்பதற்கே கடினமாக உள்ளது. பதக்கங்களின் மதிப்பை நமக்கு உணர்த்திய நிகழ்வு அது. இங்கே மற்றொரு விளையாட்டு, இந்தியராகிய நாம் உயிராக கருதும் கிரிக்கெட். ஆசியா போட்டிகளிள் 2010 முதல் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டது. இதுவரை இரண்டு ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி இருமுறையும் தங்கள் நாட்டின் சார்பாக எந்த வீரரையும...

மூன்றாவது கோணம் - யேசுதாஸின் குரல்

Image
காலையில் செய்தித்தாள் வாங்கலாம் என்று கடைக்கு சென்ற பொழுது கடைக்கு வெளியே தொங்க விடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த அனைத்து செய்திதாள்களின் தலையங்கத்திலும் தவறாமல் இருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தது. "பெண்களுக்கு எதிரான கருத்து  யேசுதாஸ் பேச்சால் சர்ச்சை" நானும் ஆர்வமாக செய்தித்தாளை வாங்கி அவரது பேச்சு பற்றிய கட்டுரையை படித்தேன். அவரது முழு பேச்சும் கீழே தரப்பட்டுள்ளது. "பெண்கள் ஆண்களைப் போல் இருக்க முயற்சிக்கக் கூடாது. பெண்களின் அழகு அவர்கள் எளிமையில் இருக்கிறது. ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து மற்றவருக்கு பெண்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. எதை மறைக்க வேண்டுமோ அதை மறைப்பது அவசியம்.  பெண்கள், தங்கள் உடையலங்காரத்தால் ஆண்களை தேவையில்லாத செய்கைகளில் ஈடுபடத் தூண்டக் கூடாது. ஆண்களை ஈர்க்கும் வகையில் உடைகளை அணியக் கூடாது.  ஜீன்ஸ் அணியும் பெண்ணைப் பார்க்கும் ஓர் ஆண் ஆடைக்குள் ஒளிந்திருக்கும் பெண்ணின் அங்கங்களையும் பார்க்கத் தூண்டப்படுகிறான். ஜீன்ஸ் - இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான உடை"  இதை படித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்வு இது அவரது சொந்த கர...

இது ஒரு சாலையின் கதை

Image
15 வருடங்களுக்கு முன்பு அந்த சாலையில் சென்றவர்கள் யாரும் KFC யை பார்த்திருக்க மாட்டார்கள், வானளாவிய கட்டிடங்களை சத்தியமாக பார்த்திருக்க மாட்டார்கள். அதிகபச்சம் புதர்களையும் செடிகளையும் மட்டுமே பார்த்திருப்பார்கள் . இன்றோ வானளாவிய கட்டிடங்கள், எப்பொழுதும் கழுத்தில் அடையாள அட்டையுடன் சுற்றும் மனிதர்கள், அவர்களின் பர்சுகளை நம்பி இயக்கப்படும் ஏ.சி பேருந்துகள் என வருடங்கள் அந்த சாலையை உரு தெரியாமல் மாற்றிவிட்டது. ஆம் சென்னையில் இருந்து பல்லவன் செய்து வடித்த சிற்ப கோவில்களை காண மஹாபலிபுரம் செல்ல மட்டும் பயன்படுத்தப்பட்ட சாலை தான் (அட நம்ம OMR ரோடு தாங்க ) இன்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரி இந்தியர்களின் வாழ்வாதாரம். அவர்களுக்கு மட்டுமா ? இரண்டு லட்சம் ஊழியர்களை நம்பி தொடங்கப்பட்ட தங்கும் விடுதிகள் ,  KFC, பிட்சா கடைகள்,  ஆந்திரா உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் , ஆட்டோக்கள்  என இந்த சாலையால் வாழ்கையை ஓட்டுவோர் பலர். CTS , TCS , இன்போசிஸ், விப்ரோ என இந்த சாலையில் இந்தியாவின் மிக  முக்கியமான அனைத்து ஐ.டி கம்பெனி...

பிக் டேட்டா (Big data : The Next Generation IT Technology)

Image
பிக் டேட்டா ! பெயருக்கு ஏற்றார் போல் பலரது வாழ்கையில் பெரிய மாற்றங்களை கொண்டுவரப்போகும் ஏரியா இது. ஐ. டி துறையில் தற்போதைய டிரெண்ட் டாபிக் இதுதான். பிக் டேட்டா சார்ந்த வேலை வாய்ப்புகள் மட்டும் அடுத்த இரு ஆண்டுகளில் 2 இலச்சமாக இருக்கும் என்கிறது ஆய்வு. சரி பிக் டேட்டா என்றால் என்ன என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா  பிக் டேட்டா வை  எளிமையாக புரிய வைக்க ஹிந்து தமிழ் செய்தி தாளில் வந்த தொடர் கட்டுரைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 1.  தேடவேண்டிய இடத்தில் தேடு 2.  டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் 3.  டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்? 4.  பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன? 5.  பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்! 6.  தகவலும் சிறந்த மூலதனமே! 7.  இது எப்படி உதவும்? 8.  எங்கும் எதிலும் அனலிடிக்ஸ் --நன்றி ஹிந்து தமிழ்.