சம்பளத்தோடு ஆபரேஷன் - தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள்
லட்ச லட்சமாக பணம்கொடுத்து வைத்தியம் பார்த்தவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். வைத்தியமும் பார்த்துவிட்டு கையில் பணமும் கொடுத்த தஞ்சாவூர் கதை பற்றி கேள்விபட்டதுண்டா? தஞ்சாவூர் நீங்கள் அறியாத தகவல்கள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் ஆவணங்களை ஆய்வு செய்த ஒரு நிபுணர் குழு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றது. காரணம், சரஸ்வதி மஹால் ஆவணங்களில் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே 44 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ததற்கான குறிப்புக்கள் உள்ளன. அவற்றில் 6 குறிப்புக்கள் மோடி ஸ்கிரிப்ட் (Modi Scripts) எனப்படும் மராத்தா மொழியிலும், 38 குறிப்புக்கள் ஆங்கிலத்திலும் உள்ளன. சிகிச்சை எடுத்து கொண்டவர்களின் வயது 5 முதல் 60. அந்த ஆவணங்களோடு 18 படங்களும் கிடைத்தன. ( சில படங்கள் உங்கள் பார்வைக்கு ) இந்த படங்கள் கண் நோயையும் அதற்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளன. "கார்னியா (Cornea), லென்ஸ் (lens), கண்ஜெக்டிவ் (Conjective) " போன்ற பல நவீன கால வார்த்தைகளு...