ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைப்பது எப்படி ?
மத்திய அரசு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு முகாம்களும் தொகுதி வாரியாக ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டது. நீங்கள் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை இணைத்து விட்டீர்களா ? இணைக்காவிட்டால் கவலைப்படவேண்டாம். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை ஆன்லைனிலும் ஏன் மொபைலிலும் கூட செய்யலாம். அதற்கான வழிமுறைகள் இதோ ! http://electoralsearch.in/ தளத்துக்கு செல்லவும். முதலில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை (EPIC Number ) கொண்டோ அல்லது தகவல்களை கொண்டோ உங்கள் வாக்காளர் விவரங்களை தேடவும் (Search). உங்கள் வாக்காளர் தகவல்கள் கீழே காட்டப்படும். அதில் FEED AADHAAR NO. என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆதார் தகவல்களை தரவும். ஆதார் தகவல்களை உள்ளீடு செய்த பின் submit செய்யவும். உங்கள் ஆதார் கார்டு வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிடும். மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில் சந்தேகம் இருப்பின் அல்லது மேலே தரப்பட்ட தகவல் போதுமானதாக இல்லையெனில் கீழே கொடுக்கப்பட்டு