Cashless Economy சாத்தியமா?
இந்தியாவில் cashless economy ஊக்குவிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததும் (கவனிக்கவும் ஊக்குவிக்க மட்டுமே நிர்பந்தபடுத்தப்பட போவதில்லை) இதெல்லாம் தேவையா சாத்தியமா என்று பலவாறான விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர்களுக்கு ஒரு குட்டி கதை ராஜிவ் காந்தி 1986 ஆம் ஆண்டு IT புரட்சி பற்றி பேசிக்கொண்டிருந்தார், IT இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்றார். இங்கே விவசாயிகள் பிரச்சனை இத்தனை இருக்கும் பொழுது நம் பிரதமர் கம்ப்யூட்டர் கிம்ப்யூட்டர் என்று உளறிக்கொண்டு இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்! இன்னும் சில கட்சிகள் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது கம்ப்யூட்டர் ஒரு ரோபோட் அது தொழிலார்களின் வேலைவாய்ப்பை பறித்து விடும் இந்தியா அவ்வளவு தான் என்று போராட்டமே நடத்தினார்கள். படிக்க ஆதாரம் : http://pazhayathu.blogspot.in/2010/04/anti-computer-protests-1980-by-commun.html ஆனால் ராஜிவ் உறுதியாக இருந்தார் ! IT யை ஊக்குவித்தார் ! விளைவு இன்று IT துறை இந்திய பொருளாதாரத்தில் 8 % சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் 29 லட்சம் பேர் நேரடி...