ஏன் GSTயை ஆதரித்து இத்தனை post விக்கி ??

காரணம் informal sector என்று சொல்லப்படும் நிறுவனங்கள் பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்கின்றன என்பது என் கருத்து..

அதே சமயம் informal sector நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களையும் பெரிதாக ஏமாற்று கின்றன.

உதாரணமாக formal sector நிறுவனத்தில் உங்களுக்கு பணி கிடைத்தால் முதல் வேலையாக உங்களுக்கு PF, pension கணக்குகள் துவங்கப்படும். அதில் உங்கள் சம்பளத்துக்கு ஏற்ப ஒரு தொகை மாதமாதம் கட்டப்படும்.. அதே போல் இன்சூரன்ஸ் policy கண்டிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து வழங்கப்படும்.

ஜிஎஸ்டி GST

உங்கள் சம்பளம் வங்கிகணக்கில் மட்டுமே போடமுடியும் என்பதால் அந்த பணம் கறுப்பு பணமாக இருக்காது. உங்கள் சம்பளத்தை வைத்தே நீங்கள் வங்கிகளில் லோன் பெறுவதோ வீடு கட்டுவதோ சாத்தியம்.

டீ கடையில் வேலைசெய்பவர் உங்களை விட அதிகம் சம்பாதித்தாலும் அவருக்கு வங்கிகள் லோன் தரவோ அவர்கள் மகனுக்கு கல்வி கடன் தரவோ தயங்கும் என்பதை நினைவில் கொள்க..

இருபது வருடம் வேலைபார்த்தால் குறைந்த பட்சம் சில லட்சங்கள் உங்களுக்கு PF தொகையாக கிடைக்கும் ஆனால் informal sectorல் பணி புரிந்தால் 20 வருடம் சம்பாதித்து வரவுக்கு செலவுக்கும் தான் சரியாக இருக்கும், பிற்காலத்தில் அவர்கள் ஏழ்மை நிலையிலேயே தள்ளவேண்டும்..

GST இந்த INFORMAL SECTOR சரி செய்யவே பெரிதாக உதவும்.

GST LONG TERMல் ரொம்ப நல்லது..

உதவிய குறிப்புக்கள் 

http://www.livemint.com/Opinion/zfJfZ5MjWc7h03TMFNDp1J/A-brave-new-India.html

http://www.livemint.com/Money/TN4hzAwjX8loPEEsCpVHXP/The-shift-from-the-informal-to-the-formal-sector.html 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)